உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

279

L

15. கந்தன் பிறப்பினைக் கூறும்

கதைகளின் ஆராய்ச்சி

இனிக், கந்தன் பிறப்பினைக் கூறும் புராணக்கதைகள் சிலவற்றின் இழுக்கினைச் சிறிது இங்கு எடுத்துப் பேசுவோம். கந்தன் அல்லது கார்த்திகேயன் அல்லது சுப்பிரமணியன் என்னுங் கடவுளின் பிறப்பைக் கூறும் நூல்களில் மிகவும் பழமையானது தமிழிலுள்ள பரிபாடலேயாகும்; அதற்கு அடுத்த பழமையுடையது வடமொழியிலுள்ள மாபாரதக் கதை யாகும்; அதற்கடுத்த பழமையுடையது வடமொழி வான்மீகி இராமாயணக் கதையாகும்; அதற்குப் பின் வந்தது கந்தபுராணக் கதையாகும்; இந் நான்கு நூல்களிலும் வந்த கந்தன் கதையின் மாறுபாட்டினை இங்கு அடைவே எடுத்துக் காட்டுவாம். முதற்கண் தமிழிலுள்ள ‘பரிபாடல்' ஐந்தாம் பாட்டிலும் பத்தொன்பதம் பாட்டிலுஞ் சொல்லப்பட்ட கதையினை எடுத்துரைப்பாம். ஒரு காலத்திற் சிவபெருமான் உமையம்மையை நீண்டநாள் தொடர்பாகப் புணர்ந்து கொண்டிருப்ப, அதனைக் கண்ட இந்திரன் அச்சமுடைய னாகிச் சிவபெருமான் பாற் சென்று வணங்கி ‘இப் புணர்ச்சி யாற் றோன்றிய கருவை அழித்தருள்க' என்று வேண்டினானாக, அவனதுவேண்டு கோளுக்கிசைந்த பெருமானும் தோன்றிய அக் கருவைப் பல துண்டங்களாக வெட்டி எறிந்து விட்டன னென்றும், அதனைக் கண்ட தெய்வமுனிவர்கள் எழுவரும் கரு தேவர்களின் படைக்குத் தலைவனாதற்கு உரித்து என்றுணர்ந்து, அதனை எடுத்துப் போய்த் தம் மனைவியர் கையிற் கொடுக்க, அவருள் அருந்ததி ஒழிய, ஏனை மகளிர் அறுவரும் அதனை விழுங்கிச் சூன்முதிர்ந்து இமையமலை உச்சியிலுள்ளதொரு புல்லடர்ந்த சுனைக்கண்ணதான ஒரு தாமரைப் பூவிலே ஈன்றனரென்றும், அங்ஙனம் ஈன்ற அவ்வாறு

6

க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/312&oldid=1587419" இலிருந்து மீள்விக்கப்பட்டது