உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

மறைமலையம் – 21

மகவும் ஒன்று சேர்ந்து, ஓருருவாகித் தன்னைக் காணவந்த இந்திரனைப் புடைக்க, அவன் அப் பிள்ளைக்குத் தோற்று அப் பிள்ளையைத் தன் படைக்குத் தலைவனாய் அமைத்துக் கொண்டனென்றும், பின்னர் அப்பிள்ளை தென்கடலகத்து மாவின் வடிவாயிருந்த சூர் என்னும் ஒரு கொடிய உயிரை மாய்த்தனனென்றும், அதன்பின் இந்திரன் மகள் தெய்வயானை என்பாளையுந் தமிழ்நாட்டு ஒரு வேட்டுவன் மகள் வள்ளி என்பாளையும் மணந்து கொண்டனனென்றும் அக் கதை நுவலா நிற்கின்றது. மிகப் பழையதாகிய அக்கதையின் உண்மையை ஆராய்ந்து பார்க்குங்கால் இஃது ஓர் அரசன் மகனைப் பற்றிய உண்மைக்கதையாய்க் காணப்படுகின்றதே யல்லாமற் கடவுளைப் பற்றிய கதையாய்ச் சிறிதுங் காணப்பட வில்லை. ஏனென்றாற், சிவபிரானும் உமையும் ஊனுடம்பு வாய்ந்த நம்மனோரைப் போற் புணர்ந்து கொண்டிருந்தன ரென்பதும், இந்திரன் என்னும் ஒருவன் வேண்டுகோளுக் கிரங்கிச் சிவபிரான் அப் புணர்ச்சியிற் றோன்றிய கருவைத் துண்டுதுண்டுகளாக வெட்டி வீசின னென்பதும் ஊனுடம் பில்லாது அருள்வடிவாய் அருவாய் நிற்குங் கடவுளிலக்கணத் துக்கு எங்ஙனம் பொருந்தும்? அதுவே யுமன்றி, வெட்டுண்ட அக் கருவை முனிவர் மனைவியர் அறுவரும் விழுங்கிச் சூல் முதிர்ந்து ஒரே காலத்தில் ஒரு சுனையிலுள்ள தாமரைப்பூவில் ஈன்றன ரென்பதும் எவ்வளவு பொருத்தமற்றதா யிருக்கின்றது? உலகத் தில் ஆண் பெண் புணர்ச்சியாற் பெண் கருக்கொண்டு மகவு ஈனக் காண்கின்றன மேயன்றி ஆண்கருவைப் பெண் வாயினா லுண்டு சூன்முதிர் தலை எங்குங் கண்டிலமன்றோ? இன்னும், இலங்கையிற் சூரபத்மன் என்னும் அரக்கன் தேவர்களுக்குப் பகைஞனாய் அரசு புரிந்தனனென்றும், அவனையே வடக் கிருந்து வந்த கார்த்திகேயன் போர்புரிந்து கான்றன னென்றும் பிற்காலத்துக் கந்தபுராணங் கட்டி விட்டகதை, பழைய பரி பாடலிற் சிறிதுங் காணப்படவில்லை. அதன்கட் சொல்லப்பட்ட தெல்லாந்: தென்கடற்கண் ஒரு தீவகத்தில் விலங்கு வடிவாயிருந்த சூர் என்னும் ஒரு கொடிய உயிரை முருகவேள் மாய்த்தனன் என்பதேயாகும். மிகப் பழைய காலத்தே, இப்போதுள்ள யானையினும் நூறுமடங்கு பெரிய யானை களும், ஒரு பட்டாக் கத்தியின் அகல, நிகளமுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/313&oldid=1587420" இலிருந்து மீள்விக்கப்பட்டது