உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா

6

281

பற்கள் வாய்ந்த பெரும்புலிகளும், ஒன்பதடி நிகளமும் அதற்கேற்ற அகல உயரமும் வாய்ந்த கடல் தேள்கள் நிலத் தேள்களும் இருந்தன. அவைகளால் அக் காலத்திருந்த மக்களுக்கு வந்த இடர்களும் துன்பங்களும் எம் ஒருநாவால் எடுத்துரைத்தல் இயலாது. அத்தகைய மிகப் பெரிதான உருவமுங் கொடுஞ்செயலும் வாய்ந்த விலங்குகளில் மிகப் பொல்லாத தொன்றை வடக்கிருந்துவந்த கார்த்திகேய னன்னும் ஓர் அரசிளைஞன் கொன்று தொலைத்துத், தன்னாட்டிலிருந்த பண்டைத் தமிழ்மக்களுக்கு நன்மை புரிந்த வனாதல் வேண்டும். அதுபற்றியே பேராற்றலுடைய அவ் விளைஞனைச் சிவபிரான்றன் மகனாக வைத்து வழிபாடு ஆற்றுவா ராயினர். இத் துணையேதான் பழைய பரிபாடற் கதையாற் புலப்படும் உண்மை நிகழ்ச்சியாகும்.

இனி, மாபாரதக் கதையிற் போந்த கந்தன் பிறப்பினை எடுத்துக் காட்டுதும், ஒருகாலத்தில் தீக்கடவுளானவன் (அக்நிதேவன்) தெய்வமுனிவரர் எழுவர் மனைவிமாரின் பேரழகைக் கண்டு அவர்மேல் அளவிறந்த காதல் கொண்ட னாம். என்றாலும், அவர்கள் முனிவரின் கற்பிற் சிறந்த மனைவிமாராய் இருத்தலினாலும், தாம் அவர்கள்மேற் காதல் கொண்டது போல் அவர்கள் தம்மேற் காதலுறாமையாலும், அவர்களைப் பெறும் விருப்பத்தை விட்டுக் காட்டுக்குப் போயினனாம், அப்போது தக்கன் மகளாகிய ‘சுவாகா’ என்பவள் அத் தீக் கடவுளைக் கணவனாகப் பெறுதற்கு மிக விழைந்து அவன்மேற் பெருங் காதல் கொண்டனளாம். அத் தீக்கடவுளோ முனிவரரின் மனைவியர்மேற் பெருங் காதல் கொண்டிருந்த மையின் சுவாகா என்பவளை விரும்பிற்றிலனாம். அது தெரிந்த சுவாகா என்பவள் அம் முனிவர் மனைவியர் எழுவரில் அருந்ததி என்பவள் வடிவை மட்டும் அவள் தான் எடுக்க முடியாமையால், ஏனை அறுவரின் வடிவை அடுத் தடுத்துப் பெற்று அவனைப் புணர்ந்து அப் புணர்ச்சியால் வந்த கருவை ஆறுமுறை அவள் ஒருகலத்தில் இட்டு வைத்தமையின், அவ் ஆறு கருவும் ‘ஸ்கந்தன்' எனப் பெயரிய ஒருமகவாய் ஆறு திருமுகங்களு டனும் பன்னிரண்டு கைகளுடனுந் தோன்றிற் றாம். இதுவே பழைய மாபாரதத்திற் போந்த கந்தன் பிறப்பாகும். இக்கதை முன்சொன்ன பரிபாடற் கதைக்கு

ளு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/314&oldid=1587421" இலிருந்து மீள்விக்கப்பட்டது