உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

மறைமலையம் – 21

எவ்வளவு மாறு பட்டதாய் இருக்கின்றது. அதுவேயுமன்றித், தீக்கடவுள் கந்தனுக்குத் தந்தையாயின், கந்தனை யொப்ப அவனும் முழு முதற் கடவுளாக வன்றோ இருத்தல் வேண்டும்? ஆனால், தீக் கடவுளோ முனிவர் மனைவியரைக் காதலித்தான் என்று சொல்லப்படுகின்றான். வேண்டுதல் வேண்டாமை இல்லாத கடவுள் ஊனுடம்பு வாய்ந்த முனிவர் மனைவியரை விழைந்தா னென்றல் எவ்வளவு இழிந்ததாய்க் கடவுள் நிலைக்கு மாறான தாய் இருக்கின்றது! அல்லாமலும் அல்லாமலும் முனிவர் மனைவியர்போல் வடிவெடுத்த சுவாகா என்பவளைக் கூடிப் பெற்ற கந்தனென்னும் மகவு முழுமுதற் கடவுளாதல் யாங்ஙனம்? இவ்வாறெல்லாங் கடவுளிலக்க ணத்துக்குப் பலவகையால் மாறுபட்டு நிற்கும் இக் கதை, களவுப் புணர்ச்சியிற் பிறந்த ஒரு முனிவர் மகன்றன் கதையாய் இருக்கக் காண்டுமே யன்றிப், பிறப்பு இறப்பு ல்லா முழுமுதற் கடவுளான முருகப் பிரான்றன் தய்வ முழு முதன்மையை அறிவிக்கும் உண்மைக்கதை யாகுமோ? கூர்ந்து பார்மின்கள் அறிஞர்களே! இத்தகைய பொல்லாக் கதையை நம்புங் குருட்டுச் சைவர் தம் பாழ்த்த உரை சைவத்துக்குப் பகை மையா, இதுபோன்ற ஆரிய அருவருப்புகளைத் தொலைத்து, முருகப் பிரான்றன் உண்மை இயல்பை யறிந்து அவனை வழி படல் வேண்டும் என்றுரைக்கும் எமது மெய்யுரை சைவத் துக்குப் பகைமையா என்பதை ஆராய்ந்து தெளிமின்கள்!

இனி, வான்மீகி இராமாயணத்திற் சொல்லப்பட்ட கார்த்திகேயன் பிறப்பை இங்கு எடுத்துக் காட்டுதும், முன்னொருகாலத்திற் சீகண்டராகிய சிவபிரான் உமாதேவியை L மணந்து கொண்டபின், ஆயிரம் தேவயாண்டுகள் வரை யில் அம்மையைப் புணர்ந்து கொண்டிருந்தனராம். அப் போதும் உமையம்மையார்க்கு மகன் பிறந்திலனாம். ஆனாலும், இனி மகாதேவர்க்குப் பிறப்பதாகிய பிள்ளையின் அஞ்சத் தக்க பேராற்றலை நினைந்து பெருந்திகில் கொண்ட தேவர்கள் சிவபிரானையும் அம்மையையும் புணர்ச்சி தவிர்கவென்று வேண்டிக் கொண்டனராம். அதற்கியைந்த சிவபெருமான் அவர்களை நோக்கி 'முன்னமே வெளியாக்கப் பட்ட கருவை என்செய்வது' என்று தேவர்களைக் கேட்டனராம். அப்போது தேவர்கள் அக்கிநிதேவனையும் வாயுதேவனையும் அக்கருவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/315&oldid=1587422" இலிருந்து மீள்விக்கப்பட்டது