உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

283

  • கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா ஏற்கும்படி வேண்டினராம். அவ்விருவரும் அவ்வாறே செய்ய, உடனே ஒரு வெள்ளைமலை உண்டாக, அம் மலையின்கட் கார்த்திகேயன் பிறந்தனனாம். தேவர்கள் அம்மையைப்

புணர்ச்சி தவிர்கவென்று வேண்டினமையின், அவள் அவர்கள்மேற் சினந்து 'நும் மனைவிமார் எல்லாரும் வறடிகளாகுக'வென்று சபித்தனளாம். அதன்பிற் சிவபிரான் தவத்திலமரத், தேவர் களெல்லாரும் நான்முகனை யணுகிச் 'சிவபிரான் தவத்தில மர்ந்தமையின், எம்முடைய படைகளுக்குத் தலைவ னிலன்; ஆதலால், எமக்கு வேறொரு படைத்தலைவனைத் தந்தருள்க என வேண்டினராம். அப்போது நான்முகன் ‘உமைப் பிராட்டியின் சாபத்தால் நும்மனைவிமார் எவரும் புதல்வர்ப் பெறார்; என்றாலும், அக்நிதேவன் மட்டுங் கங்கையின்கண் ஒருபுதல்வனைப் பிறப்பிக்க வல்லன்; அப் புதல்வனே நும்படைக்குத் தலைவனாவன் என மொழிந்தன னாம். அது கேட்ட தேவர்கள் கயிலை மலைக்குச் சென்று தமது கருத்தை நிறைவேற்றுமாறு அக்கிநிதேவனை அமர்த்தி வைத்தனராம். அக்கிநிதேவனும் அவர் வேண்டியபடியே கங்கையைக் கருவேற்றி வைக்கக் கங்கையானவள் க கார்த்தி கேயனைக் கருவுயிர்க்கக், கருவுயிர்த்த மகவைக் கிருத்திகைகள் என்னுந் தேவமாதர்கள் பாலூட்டி வளர்க்க, அதுபற்றி அப்பிள்ளை 'கார்த்திகேய' னெனப் பெயர் பெற்றனனாம் என்று இவ்வாறு கார்த்திகேயன் பிறப்பை வான்மீகி இராமாயணம் நுவலா நிற்கின்றது.

க் கதையின்கண் ஆயிரந் தேவயாண்டுகள் வரையிற் சிவபிரான் உமைப்பிராட்டியைப் புணர்ந்திருந்தன னென்பது கடவுள் இலக்கணத்துக்குப் பெரிதும் மாறாய் நிற்கின்றது. ஏனென்றால், இறைவனும், இறைவியும் எஞ்ஞான்றும் இன்ப உருவினராயே பிரிப்பின்றி நிற்குந் தன்மையர் ஆவர். அங்ஙன மிருப்ப, ஆயிரந் தேவயாண்டுகள் மட்டும் அவர் ன்பம் நுகர்ந்தனரென்பது யாங்ஙனம் பொருந்தும்? அங்ஙனம் புணரும் முன் இன்பமின்றி இருந்தனராயினன்றோ, அவர் புணர்ச்சி யின்பத்தை விழைதல் வேண்டும்? எக்காலுமே இன்ப の ரு வினரா யிருப்பார்க்குப் புணர்ச்சியின்பம் எற்றுக்கு? ஊனுடம்புடைய எம்மனோர் பெரும்பாலுந் துன்பவயத்தராய் இருத்தலினா லன்றோ அவர் புணர்ச்சியின்பத்தை இடையி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/316&oldid=1587423" இலிருந்து மீள்விக்கப்பட்டது