உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

❖ 21❖ மறைமலையம் – 21

டையே யே வேண்டு கின்றனர். துன்பமே இல்லாது இன்பமேயாய் நிற்கும் இறை வற்கும் புணர்ச்சியின்பம் நிகழ்ந்த தென்னு மிக்கதை கடவுளின் இன்பநிலையைக் குலைப்பதாய் இருக்கின்றதன்றோ! மேலும், எம்போன்ற சிற்றுயிர்க எல்லாம் நிலையின்றி மறைந்துவிடும் ஊனுடம்பின் வாயிலாகவன்றி இன்பநுகர்தலை அறியமாட்டா. எல்லாம் வல்ல முதல்வனோ ஊனுடம்புடையன் அல்லன். அவன் அருளையே திருமேனியாக வுடையன். அவ்வருளே அம்மை வடி வாய் அப்பனை எஞ்ஞான்றும் பின்னி நிற்கு மென்பது, “அருளுண்டாம் ஈசற்கு அது சத்தியன்றே

அருளும் அவனன்றி இல்லை-அருளின்று அவனன்றே இல்லை அருட்கண்ணார் கண்ணுக்கு இரவிபோல் நிற்கும்அரன் ஏய்ந்து.”

.

என்னும் சிவஞானபோதத் திருவெண்பாவால் நன்கு வலியுறுத்தப்பட்டமை காண்க. இவ்வாறு பிரிப்பின்றி எஞ்ஞான்றும் இன்ப உருவாய் நிற்கும் இறைவனையும் இறைவி யையும் பிரித்து வைத்து, ஊனுடம்பில்லா அவர் ஊனுடம்பு டைய எம்மனோரைப்போற் புணர்ந்து கிடந்தாரென்னும் இவ்விராமாயண கதையின் பொய்யுரை எவ்வளவு இழிக்கத் தக்கதா யிருக்கின்றது பார்மின்கள்! இன்னும் எல்லா உயிர் களையும், எல்லா உலகங்களையும் படைத்துக் காத்து அழிக்கும் பேராற்றல் வாய்ந்த அப்பனும் அம்மையும் நெடுநாட் புணர்ந்தும் புதல்வர்ப்பேறு வாய்ந்திலரென்பதும், பின்னர் அம்மை வயிற்றிற் கருப் பாய்ந்திருந்த தென்பதும்,

அதனையறிந்து தேவர்கள் பெருந்திகில் கொண்டனரென்பதும் எவ்வளவு இழிவான கதைகளாயிருக்கின்றன. மேலும், பேராற்றலும் பேரருளும் வாய்ந்த இறைவன்றன் பேராற்றலும், பேரருளும் உடையதாய் இருக்குமன்றோ! அங்ஙனமிருக்க, அத்துணைச் சிறந்த மகப்பேற்றை யுணர்ந்து தேவர்கள் மகிழ வேண்டிய வராயிருக்கத் திகில்கொள்ள வேண்டுவதென்னை? அல்லதூ உம், அம்மை வயிற்றினிலிருந்த கருவை அக்கினி தேவனும் வாயுதேவனும் ஏற்றல் எங்ஙனம்? ஏற்றுக் கொண்டுபோய் வெள்ளை மலையின்கட் கார்த்தி கேயனைப் பிறப்பித்தன ரென்பதூஉம் யாங்ஙனம் பொருந்தும்? அக்கினி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/317&oldid=1587424" இலிருந்து மீள்விக்கப்பட்டது