உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா

அக்

285

வாயுவென்னுந் தேவர்களிருவரும் ஆண்களா பெண்களா? ஆண்களாயின் அம்மையின் வயிற்றிலிருந்த கருவை அவர்கள் ஏற்பதும் பிறப்பிப்பதும், ஒரு கருவை இருவர் ஏற்றுப் பிறப்பிப்பதும் ஆகிய இவை எல்லாம் எவ்வாறு செய்தல் கூடும்? பெண்க ளாயின் ஆணொடு கூடியல்லது கருவேற்றல் இயலாதா யிருக்க, இவர்கள் மட்டும் கருவை ஏற்றனரென்பது எத்துணைப் பெரும் புளுகா இருக்கின்றது! அல்லாமலும், அம்மையின் ஒரு கருவை L மாதரிருவர் ஏற்றனரென்பது தான் எவ்வாறு பொருந்தும்? மேலுந், தேவர்களின் வேண்டுகோளின்படி அக்கினி தேவன் கங்கையைக் கருவேற்றினான் என்பதும் எவ்வாறு பொருந்தும்? கங்கை என்பது வெறுந் தண்ணீரா? அல்லது தண்ணீர்க் கரையிலிருந்த ஒரு பெண்ணா? கங்கை கார்த்திகேயனைப் பெற்றனளென்றால், பெற்ற அம் மகவுக்கு அவளே பாலூட்ட வேண்டி யருக்கக், கிருத்திகைகளென்னுந் தேவமாதர் அறுவர் அம் மகவுக்குப் பாலூட்டி வளர்த்தன ரென்பது யாங்ஙனம் பொருந்தும்? ஈன்ற கங்கைக்குப் பாலில் லாமற் போயிற்றா? ஊனுடம்புடைய மக்கட் பெண்டிரெல்லாம் தாம் ஈன்ற மகவினை வளர்க்கத் தாமே பாலூட்டக் காண்டு மன்றோ? தள னுடம்பு உடையார்க்குள்ள பால்வளந்தானும் இல்லாத கங்கையைத் தேவமாதென்றலும், அவள் வயிற்றில் எல்லாம்வல்ல

றைவனான கார்த்திகேயன் பிறந்தன னன்றலும் எத்துணைப் பொருத்தமற்ற பொய்க்கதைகளா யிருக்கின்றன! இனிக் கிருத்திகை மாதர்கள் அறுவரால் வளர்க்கப்பட்டமை பற்றிக் கார்த்திகேயன் அறுமுகக் கடவுள் எனப்பட்டனனா? அல்லது முதலில் ஆறு குழந்தைகளாயிருந்து பிறகு ஒரு திருவுருவங் கொண்டமையால் அப் பெயர் பெற்றனனா என்பதும் ஆராயற்பாற்று. கதையின் போக்கையும் மற்றைப் புராணங்கள் கூறும் அறுமுகன் பிறப்பையும் உற்று நோக்குமிடத்து, முதலில் ஆறு குழந்தைகளாயிருந்து, பின்னர் அவ் ஆறும் ஒன்றாய்க் கூடி ஆறு திருமுகங்களுடைய பிள்ளை யாயிற்றென்பதே புலனாகா நிற்கின்றது. இவ்வாறு கொள்ளு மிடத்துத், தனித்தனி ஆறு குழந்தைகளாய் இருந்தபோது ஆறு உடம்புகளில் நின்ற ஆறுஉயிர்கள் ஓருயிராகி ஓருடம்பின்கண் நிற்றல் எவ்வாறு பொருந்து மென்பது வினாவப்படுமன்றோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/318&oldid=1587425" இலிருந்து மீள்விக்கப்பட்டது