உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

மறைமலையம் – 21

ஏனென்றால், உடம்புகள் அருவல்லா மாயையிற் றிரட்டப் பட்ட ன ஆகும், ஆகையால் அவற்றுள் ஒன்று மற்றொன்றாய்த் திரிதல் கூடும்; ஆனால் உயிரோ உருவில்லாத அறிவுப் பொருளாதலால் அது மற்றொன் றாய்த் திரிதல் யாங்ஙனம் பொருந்தும்? சைவ சித்தாந்த நூற்படி ஒவ்வோருயிரும் எக்காலத்தும் அழிவுபடாதுள்ள தனித்தனி முதல்களல்லவோ? இவ்வுண்மை ஆசிரியர் மெய்கண்ட தேவநாயனார்.

“அவ்வுடலில் நின்றுயிர்ப்ப ஐம்பொறிகள் தாம் கிடப்பச் செவ்விதின் அவ்வுடலிற் சென்றடங்கி--அவ்வுடலின் வேறொன்று கொண்டு விளையாடி மீண்டதனை

மாறல்உடல் நீயல்லை மற்று.

وو

என்று சிவஞானபோதத்தின்கண் தெளித்து உரைத்தமை யால் நன்கு விளங்கும். எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளாகிய சிவத்துக்கு அணுக்கராய், அச் சிவத்தோடொத்த முழுமுதல் உரிமைகள் பெரும்பாலும் உடையராய், மிக நுண்ணிய தூய மாயா உலகங்களில் வைகும் விஞ்ஞான கலர், பிரளயாகலர் என்னுந் தூய கடவுளருங் கூடத் தனித்தனி முதல்களாம் உயிர்களே ஆவர் என்று ஆசிரியர் அருணந்தி சிவனார்,

“உரைதரும்இப் பசுவர்க்கம் உணரின் மூன்றாம் உயரும்விஞ் ஞானகலர் பிரளயா கலர்சகலர் நிரையின்மலம் மலங்கன்மம் மலங்கன்மம் மாயை நிற்குமுதல் இருவர்க்கு நிராதார மாகிக் கரையில்அருட் பரன்துவிதா சத்தினிபா தத்தால் கழிப்பன் மலம் கசலர்க்குக் கன்ம ஒப்பில் தரையில்ஆ சான்மூர்த்திஆ தாரமாகித்

தரித்தொழிப்பன் மலம்சதுர்த்தா சத்திபா தத்தால்.’

என்று வற்புறுத்தி இருக்கின்றமையின்,

பிரளயாகல

விஞ்ஞானகல தத்துவக் கடவுளரில் ஒருவராகக் கார்த்தி கேயரைக் கொள்ளினும், அவர் ஓர் உயிர்முதலே யாகவேண்டு மல்லாமல் ஆறுயிர் சிதைந்து மாறிய ஓருயிராவர் என்றல் எவ்வாற்றனும் அடாது. ஆகவே, ஆறுஉயிர்கள் கூடி ஓருயிராய் ஆறுமுகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/319&oldid=1587426" இலிருந்து மீள்விக்கப்பட்டது