உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

287

கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா ஆயின என்னும் இப் பாழும் பொய்க் கதை சைவசித்தாந்த மெஞ்ஞானப் பொருளுக்கும், முருகப் பிரான்றன் முழுமுதற் றன்மைக்கும் முழுமாறாய் நின்று அவர்தம் தெய்வத்தன்மை யைச் சிதைக்கும் இயல்பினதா யிருத்தலின், இப் பொல்லாக் கதையை ஆராயாது அப்படியே நம்புங் குருட்டுச் சைவர்கள் சைவத்துக்குப் பெரும்பகைவராதலோடு, தமிழ்ப் பெருந் தெய்வமாகிய முருகப் பிரான்றன் தெய்வமாட்சியினைக் குறைக்குந் தீவினையாளராவ ரென்றும் ஓர்ந்து கொள்க.

இனி, மேற்காட்டிய மூன்று புராண கதைகட்கும் மிகப் பிற்பட்டகாலத்தே எழுந்ததாகிய கந்தபுராணத்தின்கண் நுவலப்பட்ட கந்தன் பிறப்பினை இங்கே எடுத்துக்காட்டி அதன் மாறுபாட்டினையும் ஒரு சிறிது விளக்குவாம். சூரன் சிங்கமுகன் தாருகன் என்னுங் கொடிய அசுரர்களால் மிகவுந் துன்புறுத்தப் பட்ட தேவர்கள் சிவபிரானை அடைக்கலம் புகுந்து அவ் வசுரர்களைத் தொலைத்தருளுமாறு வேண்டின ரென்றும், அதற்குத் திருவுளம் இசைந்த இறைவன் ஆறு திருமுகங்க ளோடும்விளங்கிய ஒரு திருமேனி உடையராய்த் தன்மருங்கிருந்த அம்மையைக் காதல் மிகுந்து நோக்க, உடனே அவர்தம் விந்துவானது மேல்நோக்கி எழுந்து, அவர்தம் நெற்றிக்கண்கள் ஆறிலும் ஆறு ஓளியாய் வெளிப்பட்டு அவர்க் கு எதிரே வந்து நின்றதென்றும், அவ்ஆறு

ஒளிவடிவினையும் நோக்கிய இறைவன் அக்கினிதேவனையும் வாயுதேவனையும் அழைத்து 'இவ்ஆறு ஒளிவடிவினையும் நீவிர் இருவீருங் கங்கையின்கட் கொண்டுபோய்ச் சேர்ப்பித்தல் வேண்டும்' என்று கட்டளை யிட, அவ் விருவரும் அவற்றை மாறி மாறிச் சுமந்து சென்று கங்கையின்கண் உய்த்தனரென்றும், அங்ஙனஞ் சேர்ப்பிக்கப் பட்ட அவ்ஆறு விந்து ஒளியுங் கங்கை நீரினை உரிஞ்சிவி உரிஞ்சிவிடக் கங்கையானவள் பெரிதுந் திகில் க் அவ்வொளிகளைத் தன்னருகிருந்த ஒரு புல்லடர்ந்த வாவியின் (சரவணப் பொய்கை) நடுவிலுள்ளதொரு தாமரை மலரில் ஒதுக்கிவிட, அதன் கட்கிடந்து அவ்ஆறும் ஒன்றுகூடி ஒரு திருஉருவாய் ஆறுமுகமும் பன்னிரண்டு கையும் உடையதாகி விளங்கிற் றென்றும் போந்த கதையே அதுவாம்.

கொண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/320&oldid=1587427" இலிருந்து மீள்விக்கப்பட்டது