உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

❖ - 21❖ மறைமலையம் – 21

ரு

க் கதையின்கண் கடவுளிலக்கணத்திற்கு மாறு கொண்டனவாய் இருப்பனவும் ங்கெடுத்துக் காட்டுதும்: தேவர்களின் வேண்டுகோளுக்கு இசைந்த இறைவன் ஒரு மகவினைப் பிறப்பிக்க வேண்டி ஆறுமுகங்களோடு இருந்து அம்மைமேற் காதல் கொண்டமை எற்றுக்கு? ஒருமுகத் தோடி ருந்து காதல் கொண்டாற் போதாதோ? அற்றன்று, ஆறுமுக முடைய பிள்ளைப்பேறு வேண்டி அங்ஙனங் கொண்டா ரெனின், ஆறுமுகமுடைய பிள்ளை எற்றுக்கு? அது மிகுந்த ஆற்றல் உடையதாகும் பொருட்டு ஆறுமுகம் வேண்டினா ரெனின் அப்போது ஒருமுகமுடைய தாம் அவரினும் ஆற்றலிற் குறைந்தாராய் விடுவரோ? ஒருமுகம் உடைய சிவபிரானே ஆறுமுகம் உடையராய் வேண்டியபடி மாறும் ஆற்றல் உடை ரென்றால், அங்ஙனமே அவர்தம் மகவாய் ஒருமுகத்துடன் பிறக்குங் கந்தனும் வேண்டிய போது ஆறுமுகமும் ஆறுக்கு மேற்பட்ட முகமும் எடுக்க வல்லனாம் அல்லனோ? எனவே, ஆற்றல் மிகுதியின் பொருட்டு இறைவன் பலவேறு முகங்களை வேண்டினானென்றல் பெரிதும் இழிக்கற் பாலதா யிருக்கின்றது. ஒருவருடைய ஆற்றல்அவர்தம் மன வன்மையிலிருந்து வருவதே யன்றி, உடல்வன்மையி லிருந்து வருவதன்று. ஏனென்றால், உடல்வன்மையுடையாரிற் பலர் மனத்திட்பம் இல்லாமையின் வலிவற்றவரா யிருக்கின்றனர். உடல்வலிமை இலரேனும் மனத்திட்பம் மிகுதியும் உடையார் பிறராற் செய்யலாகாத அரிய பெரிய ஆண்மைச் செயல் களையும் ஆற்றியிருக்கின்றனர் இது, பேராண்மையிற் சிறந்த நெப்போலியன் போன்ற மன்னர் சிலரின் வரலாறுகளை உற்று நோக்குதலால் நன்கு அறியலாம்.

னிச், சிவபிரான் தமது விந்துவினை வெளிப்படுத்தும் பொருட்டு அம்மையைக் காதலுடன் நோக்கினர் என்றும், அதனால் மேலெழுந்து நெற்றிக் கண்களின் வழியாக வெளிப் போந்த ஆறு விந்துவடிவே ஆறுமுகனாயிற்றென்றும் சொல் லுங்கதை மிகவும் பொருத்தமற்றதா யிருக்கின்றது. அம்மை பெண்வடிவும் ஐயன் ஆண்வடிவும் உடையராயிருக் கையில், அவர்தம் புணர்ச்சியினாலன்றோ மகப்பேறுண்டாதல் வேண்டும். அவ்வாறின்றி, அப்பனிடத்துள்ள விந்துவின் வெளிப் பாட்டினாலேயே பிள்ளைப் பேறுண்டாகுமெனின், புணர்ச்சி க்கும் பிள்ளைப் பேற்றுக்கும் இசைந்த பெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/321&oldid=1587428" இலிருந்து மீள்விக்கப்பட்டது