உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா

வாலாமை

289

வடிவுடைய அம்மையை அவருடன் பொருத்துவது எற்றுக்கு? அம்மையின் வயிற்றிற் கருவமைத்துப் பின் அவர் குறிவழியே அதனைப் பிறப்பித்தல் அருவருக்கற் பாலதாகலின் இறைவன் அவ்வாறு செய்யாமல் தன்னுடம்பினின்றே அம் மகவினைத் தோற்று வித்தானெனின், அப்பனுடம்பினும் அம்னையி னுடம்பு தாழ்ந்த தென்றும், அஃது அருவருப்புடைய வாலாமை (அசுத்தம்) யுடையதென்று மன்றோ கொள்ளல் வேண்டும். வினைவயத்தாற் பிறக்கும் எம்மனோர்க்குள்ள ஊனுடம்புகளே யுடை யனவாகுமன்றி, வினைவயப்படாது இயற்கையிலேயே அருளொளிவடிவாய் விளங்கும் அம்மையினுடம்பும் வாலாமை யுடையதாகுமோ? அவளுடம்பு சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டா எல்லையற்ற ா தூய்மையுடையதென்று ‘கேனோபநிடதம்' கிளத்தலை மேலெடுத்துக் காட்டினமே. அத்துணை அருட்டூ ய்மை வாய்ந்த அம்மையின் திருவயிற்றில் அக் கருவைப் புகுவித்துப் பிறப்பித்தலன்றோ முறையாம். அதற்கு மாறாக இறைவனே அக் கருவைத் தோற்றுவித்தனனென்பது எவ்வளவு இயற்கைக்கு மாறாய் இருக்கின்றது! அதுவேயுமன்றி, அப்பனு டம்பிலும் அம்யிைனுடம்பு தாழ்ந்த தொன்றாயின், அத்தகைய உடம்பினளை அவன் கூடியிருத்தலுந் தாழ்ந்ததா மன்றோ? அப்பன் அம்மையைப் புணர்தல் அருவருக்கத் தக்க தாயின், அம்மையின் சேர்க்கையின்றி அப்பன் தனியனாயல்லனோ இருக்கற்பாலன். அத்துணை தான் ஏன்? புணர்ச்சியானது குற்ற முடையதென்பார்க்குப், பெண்டெய்வம் ஒன்றுளதெனக் கோடலுங் குற்றமாமன்றோ? மேலும், அம்மையைக் காதல் கொண்டு நோக்கிய பின்னரே அப்பனுக்கு விந்து வெளிப்படு வதாயிற்றென்றலும், அவ்விருவர்க்கும் புணர்ச்சியுண்டென் பதை அறிவிக்கின்றது. புணர்ச்சியின்பத்தை வேண்டியே பெண் பாலார் மேல் ஆண்பாலார் காதல் கொள்கின்றனரன்றி, அதனை வேண்டாது காதல் கொள்வாரை யாண்டுங் காண் கிலேம். அற்றன்று, புணர்ச்சி வேண்டாது காதல் கொள்ளுதலே சிறந்ததாமெனின், ஆண்மக்கள்மேல் ஆண்மக்கள் காதல் காள்ளுதலே அமையும். பெண்மக்கள் வேறு எற்றுக்கு என்று வினா நிகழுமன்றோ? அல்லதூஉம், பெண்மக்களைக் காதலித் தலும் அவரொடு புணர்தலும் அருவருக்கற் பாலவெனின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/322&oldid=1587429" இலிருந்து மீள்விக்கப்பட்டது