உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

மறைமலையம் – 21

ரு

பிள்ளைப் பேறு வேண்டுதலும் அருவருக்கற்பாலதன்றோ? பிறர் நலத்தின் பொருட்டுப் பிள்ளைப்பேறு இன்றியமையாத தாயிற் றெனின்; அங்ஙனமே பிள்ளைப்பேற்றின் பொருட்டும் ஆண் பெண் ண் புணர்ச்சியும் இன்றியமையாததாய் இரு பாலார்க்கும் இன்பத்தைத் தரும் பெற்றியதாகு மன்றோ! அவ்வாறிருக்கப், புணர்ச்சியைக் குற்றமென்றும், அப் புணர்ச்சியாலுண்டாகும் மகப்பேற்றை மட்டும் நல்லதென்றும் ஆராயாது மடமையாற் கூறுவோர், இறைவன் வகுத்த ஆண் பெண் அமைப்பு முறையின் உண்மையைச் சிறிதும் உணராதவரே ஆவர். ஆகவே, அம்மை யைப் பக்கத்தே வைத்துக் கொண்டு அவளொடு புணராதே அக் கருவினை இறைவன் தோற்றுவித்தானென்றல் ஒருவாற்றானும் பொருந்தாத பொய்க் கதையேயாம். அம்மையைப் புணராதே அங்ஙனம் அதனைத் தோற்றுவிக்க வல்லவன், அதனைத் தோற்றுவித்தற்கு வாயிலாக அவளைக் காதல் கொண்டு நோக்குதலும் பழுதாமன்றோ? இங்ஙனமெல்லாம் இக் கதையின் பொய்ம்மையினை ஆராய்ந்து பார்க்குமிடத்து, அப்பனிலும் அம்மையை இழிவாக நினைந்து, அக் கருவினை அவள்பாற் பிறப்பித்தலையுங் குற்றமாகக் கருதிவிட்ட ஆராய்ச்சி அறிவில் லாக் கயவன் எவனோ ஒருவன், எல்லாம் வல்ல அம்மையப்பரின் இலக்கணத்துக்கும், முழுமுதற் றெய்வம் வகுத்த இயற்கை முறைக்கும் முற்றும் மாறாக இக் கதையைக் கட்டிவிட்டன னென்பதே நன்கு புலனாகா நிற்கின்றது.

னி, இறைவன் ஆறுமுகனைப் பிறப்பிக்கும் பொருட்டு அம்மையைக் காதலிக்க, அவனது விந்து மேல்நோக்கி எழுந்து அவன் கண்களின் வழியே வெளியாயிற்றென்றலுங் கடவுளிலக் கணத்துக்கு மாறாய் நிற்கின்றது. ஏனென்றால், உ ம்பின் மூலத்தில் இருக்கும் விந்துவை மேலெழுப்பி மூளையிற் சுவறு வித்தல் தவமுறையாகிய யோகமார்க்கம் ஆமென்றும், அதனை அங்ஙனம் மேலெழ விடாது குறிகளின் வழியே கீழ்ச் செல விடுத்தல் புணர்ச்சிக்குங் கருத்தோற்றத்திற்கும் உரிய போக மார்க்க மாமென்றும் நூல்வழக்காலும் உலக வழக்காலும் அறிவுடையோர் நன்குணர்வர். தவமுறையால் விந்துவை மூளைக்கு ஏற்றுதல் கருத்தோற்றத்திற்கு இடை யூறாகுமே அல்லாது அஃது அதற்குச் சிறிதும் உதவியாகாது. அங்ஙன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/323&oldid=1587430" இலிருந்து மீள்விக்கப்பட்டது