உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா

291

மிருக்கப், பிள்ளைப்பேறு வேண்டிய இறைவன் தன் விந்துவினை மேன்முகமாக எழுப்பினானென்றால் எத்துணை மாறுபாடாய் இருக்கின்றது! வயிற்றின் அடிக்கீழ் இருக்கும் விந்து ஆண்குறி வாயிலாகக் கீழிறங்கி ஒரு பெண்ணின் கருப்பையிற் புகுந்தா லன்றிக் கருவுண்டாதல் வேறு எவ்வாற் றானுங் கூடாதாகும். இவ்வியற்கை முறையொடு திறம்பி இறைவன்றன் விந்து மேலெழுந்து அவன் கண்களின் வழியே வெளிப்போந்து கருவாயிற்றென்றல், அறிவில்லாருஞ் சிறிது நினைந்து பார்ப்பின் ஏற்றுக் கொள்ளாத தொன்றாம். க் கதைப் பொய்ம்மையினை ஆராய்ந்து நோக்குங்கால், இறைவனது உடம்பின் மேற்பகுதி யினை உயர்வாகவுங், கீழ்ப்பகுதியினைத் தாழ்வாகவும் நினைந்து விட்ட புல்லறிவி னனான எவனோ ஓர் இழிஞன் இக் கதையினைக் கட்டி விட்டானென்பது தெற்றென விளங்கா நிற்கும். மாற்றற்ற தங்கத் தினாற் சமைக்கப்பட்ட ஒரு வடிவத்தில் மேற்பகுதி உயர்ந்த தென்றுங், கீழ்ப்பகுதி தாழ்ந்ததென்றுங் கூறுதல் பொருந்தாமை போல, அளவிலாத் தூய அருள் வடிவாய் நிற்கும் இறைவன்றன் திருமேனியில் உயர்ந்ததெது? தாழ்ந்ததெது? திருமேனி முழுதும் அளக்கலாகாத் தூய்மையும் விழுப்பமும் வாய்ந்ததாமன்றோ? இவ்வளவு தானும் ஆய்ந்து பாராமல் அத் திருமேனியின் கீழ்ப்பகுதியை இழிந்ததாகப் பிழைபடக் கருதி, அவ்வாற்றால் ஆறுமுகன் பிறப்பைப் பின்னும் பலவாற்றாற் பிழைபடுத்திய கீழ்மகன் புல்லறிவுமாட்சியை என்னென் றுரைப்பேம்!

L

இனி, இறைவன் தன் நெற்றிக் கண்களின் வழிப்போந்து தன்னெதிரே நின்ற ஆறுகருவினையும் உடனே ஏற்று வளர்த்துக் கொள்ளாது, அவற்றைக் கங்கையின்கட் கொண்டுபோய்ச் சேர்ப்பிக்கச் செய்தமையும், அங்கு அவை னியே கிடந்த கிடந்த வான்மீன்களாற் பாலூட்டப் பெற்று வளர்ந்தமையும், அவ் விறைவனுக்குத் தன்மகவின்பால் அருளிரக்க மில்லாக் குறை பாட்டினை ஏற்றுகின்றதன்றோ? எத்துணை இழிந்த உயிர் களையுந் தோற்றுவித்து, அவற்றை

வொரு நொடியுங் கண்ணுங் கருத்துமாய்ப் பாதுகாத்து வளர்த்துவரும் அம்மை யப்பர், தாம் ஈன்ற அறுமகவினை அங்ஙனம் அருள் இரக்க மின்றிக் கங்கையின்கண் எறிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/324&oldid=1587431" இலிருந்து மீள்விக்கப்பட்டது