உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

❖ 21❖ மறைமலையம் – 21

விடுவரோ? உற்று நோக்குங் கால், நம் ஊனுடம்பின் தோற்ற வளர்ச்சியிற் பழகின அழுக் கறிவைக் கொண்டு, எல்லாம் வல்ல முருகன் பிறப்பினைக் கூறப் புகுந்த எவனோ கீழ்மகன் ஒருவன், அவன் பிறப்பினுக்குத் தூய்மை தூய்மை கற்பிப்பான் புகுந்து கடவுளிலக்கணத்துக்குப் பெரிதும் மாறான இத்துணைப் பொய்க்கதைகளையுங் கட்டிவிட்டா னென்பது நன்கு அறியக் கிடக்கின்றது. இங்ஙனம், பேதை யாயினான் மேற்கொண்ட ஒரு முயற்சி பொய்பட்டுப் பெரிதும் இடர் பயத்தல் கண்டன்றோ, ஆசிரியர் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார்,

“பொய்படும் ஒன்றோ புனைபூணுங் கையறியாப் பேதை வினைமேற் கொளின்.'

என்று அருளிச் செய்தார். இவ்வாறெல்லாம் முருகன் பிறப்பைப் பற்றிப் பேதையாயினார் கட்டி விட்ட கதைகள் நான்கும் ஒன்றோடொன்று பெரிதும் மாறு காண்

முழுமுதற் றெய்வ இலக்கணத்தையும், அத் தெய்வத்தால் வகுக்கப்பட்ட அருளியற்கை முறையினையுஞ் சிதைப்பன வாயிருத்தலின், இன்னோரன்ன பொய்க்கதைகளைக் கொண்டு இறைவன்றன் அருட்டன்மைகளை ஆராயப்புகுதல்.

“ஒப்பிலா மலடிபெற்ற மகன் ஒருமுயற்கொம்பேறித், தப்பிலாகாயப் பூவைப் பறித்த

وو

மைக்கே ஒப்பாய் முடியுமென்க. ஆதலால், இவைபோன்ற பொய்க்கதைகள், இறைவன் அருளிலக்கணத்தை வற்புறுத்துஞ் சைவ சித்தாந்தத் தனிப்பெருங் கோட்பாட்டுக்குச் சிறிதும் உடம்பாடாக என்று உணர்தலும், உணர்ந்து அவ்வழி ஒழுகு தலுமே உண்மைச் சைவர்க்குரிய உண்மை நெறியா மென்று உணர்ந்து தெளிந்து கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/325&oldid=1587432" இலிருந்து மீள்விக்கப்பட்டது