உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

293

16. முருகப்பிரான் திருவுருவ வழிபாட்டின் உண்மை

அற்றேல், முருகன் திருவுருவ வரலாற்றினைப் பற்றிய உண்மை உரைதான் யாதோவெனிற் கூறுதும். கடவுள் மிக நுண்ணிய அருள்ஒளி வடிவாய் விளங்குந் தன்மையரென்பதும், அவரது அவ்வருவொளி வடிவினைக் காணுதற்கு ஏற்ற அறிவும் ஆற்றலும் இல்லாத மக்கட் பிறவியினரான நம்மனோர்க்குத் தமது அவ் வடிவினை ஒரு சிறிதாயினுங்காட்டி, நமது அறிவை விளக்குதல் வேண்டும் என்னும் பேரிரக்கத்தால் அவர் தமது ஒளிவடிவோடு ஒரு புடையொத்த தீ ஒளிவடிவில் தம்மை நமக்கு விளங்கக் காட்டுகின்றார் என்பதும், நமக்குப் புலனாகுந் தீயொளி வடிவுகள் திங்களும் ஞாயிறும் நெருப்புமேயாம் என்பதும், இவற்றுள்ளும் ஞாயிறு ஒன்றுமே இயற்கைத் தனிப் பேரொளியாய் விளங்குவதாமென்பதும், அதுபற்றியே பண்டைத் தமிழர்க்கு முதலாசிரியரான விசுவாமித்திர முனிவர் தாம் வகுத்த இருக்குவேத மூன்றாம் மண்டிலத்தின் கட் பகலவனில் வைத்து இறைவனை வணங்குங் ‘காயத்ரி’ மந்திரமாகிய,

“ஓம்தத் சவிதுர்வரேண்ம் பர்க்கோ தேவஸ்ய தீமஹீ

தீயோ யோந: ப்ரசோதயாத்.”

என்பதனை இயற்றியருளினரென்பதும், அவரை முத லாகக் கொண்டுவந்த பிற்காலத்துச் சான்றோர்களும் பகலவனை முதன்மையான உடம்பாகக்கொண்டு சிவம் என்னும் மேலான பொருள் விளங்கா நிற்கின்றது என்னும் பொருள்படச் “சூர்யோ முக்ய சரீரந்து சிவஸ்யபரமாத்மந:” என்று அருளிச் செய்தன ரென்பதும், இவ் வடிப்பட்ட சான்றோர் கொள்கைக்கு இணங் கவே சைவ சமயாசிரியராகிய திருநாவுக்கரசு நாயனாரும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/326&oldid=1587433" இலிருந்து மீள்விக்கப்பட்டது