உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

66

மறைமலையம் – 21

“அருக்கன் பாதம் வணங்குவ ரந்தியில்

அருக்கன் ஆவான் அரன்உரு அல்லனோ இருக்கு நான்மறை ஈசனை யேதொழுங்

கருத்தினை யறியார் கன்ம னவரே

என்று அருளிச் செய்தன ரென்பதும் மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் முதலான எம்முடைய நூல்களிற் பலகாலும் பலவிடத்தும் எடுத்து விளக்கிக் காட்டியிருக் கின்றேம்.

நா

பாருங்கள் அன்பர்களே! பகலவன் ஒளி ஒன்று மட்டும் இல்லையாயின், இந்த நிலவுலகத்தின் நிலை எத்தன்மைய தாயிருக்கு மென்பதைச் சிறிதாயினும் உற்று உணர்மின்கள்! டோறும் பகலவன் ஒளி விளக்கம் வருதலும் போதலுமாய் மாறி மாறி இடை யறாது நிகழ்ந்து வருதல்பற்றி நாம் அதன் அருமைப்பாட்டினை உணர்ந்து பாராது நாட்கழித்து வருகின் றோம். பகலவன் இல்லாது ஒழியின் நிலவொளியும் இல்லை யாம். நிலவொளி என்பது பகலவன் ஒளியின் எதிரொளி யன் றோ? பகலும் நிலவும் இல்லையாயின் எங்கும் இருள் சூழ்ந்திருப் பதன்றி, வெளிச்சத்தைக் காண்டல் சிறிது சிறிதுமே ம இயலாது. ஞாயிற்றின் வெப்பம் இல்லையாயின் எங்குங் கடுங்குளிருங் கொடும் பனியும் மிகுந்து விடும். ஆதலால், நெருப்பை உண்டாக் குதலும் ஒருவாற்றானும் இயலாது. ஞாயிற்றின் சூடும் ஒளியும் இல்லையாயின், புற்பூண்டுகள் மரஞ்செடி கொடிகள் முதலிய நிலையியற் பொருள்களும், விலங்குகளும் மக்களும் ஆகிய யங்கியற் பொருள்களும் உளவாகா. எங்கும் வெறும் பாழா கவே, இருளாகவே, பனி யாகவே, குளிராகவே இருக்கும். இத் தன்மைத்தாகிய பாழ் நிலைமையின் கொடுமையினை ஒருவாறா யினுந் தெரிதல் வேண்டின், இந் நிலவுலகத்தில் வடகோடிக்கண் உளவான பசுநிலப் (Green Land) பகுதிகளைச் சென்று பார்த்தல் வேண்டும், அந் நிலப்பகுதிகளில் மூன்று திங்கள் வரையில் மூடியிருக்கும் பேரிருளோ அப்பகுதிகளிலுள்ள மக்களால் தாங்கமுடியாத தாய்ப், பெருந்துன்பத்தையும் பேரிடர்ப் பாடுகளையும் விளைவிப்பதாய் இருக்கின்றது. அவ்வாறு அம் மூன்று திங்களுங் கொடிய அவ்விருளிலுங் குளிரிலுங் கிடந்து துன்புறும் அம் மக்கள் அம் மூன்று திங்கள் முடிவில் வானின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/327&oldid=1587434" இலிருந்து மீள்விக்கப்பட்டது