உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா

295

கட்டோன்றும் ஒரு பெரு மின்னொளியினைக் கண்ட அளவிற் சொல்லுக் கடங்கா மகிழ்ச்சியினராய், அவ்வொளியினை வணங்கி வாழ்த்துதலையும், அம் மின்னொளியும் மறைந்து சன்றபின் அடுத்துத் தோன்றும் பகலவனொளியினைக் கண்டு அவர்கள் எல்லையற்ற களிப்புடையராய் ஆடிப் பாடி அதனை வழிபடுதலையுங் காணவல்லார்க்கே, ஞாயிற்றின் அருமையும் பெருமையுந் தெய்வத்தன்மையும் இனிது விளங்காநிற்கும்.

ஏனையோர்க்கு அதன் மாட்சியுங் கடவுட்டன்மையும் அத் துணையாக விளங்கா. ஏனெனின், நாளும் பாலே பருகுவானுக்கு, நாளும் நெய்யடி சிலேயுண் பானுக்கு, நாளுங் குளிர்ந்த பூங் கொடிப் பந்தரிலேயே இருப்பானுக்கு, நாளும் பொன்னிலேயே புழங்குவானுக்கு, நாளும் மென் பஞ்சின் அமளியிலேயே துயில்வானுக்குப் பாலினினிமையும் நெய்யடி சிற்சுவையும் கொடிப்பந்தரின் குளிர்நிழலும் பொன்னினரு மையும் அமளியின் மென்மையும் புலனாகாமை போல, நாளும் பகல வனது தெய்வ ஒளி விளக்கத்திலேயே பயில்கின்ற நம்ம னோர்க்கும் அதன் தெய்வமாட்சி விளங்காமற் போகின்றது; மற்றுப் புளிங்காடி நுகர்வானும், புளிங்கூழ் அயில்வானும், மணல்வெளியிற் கடுவெயிலால் வெதும்பு வானும், பொன்னை யே காணாது மிடிப்பட்டு வருந்துவானும், பரற் கற்களிற் படுத்துத் துன்புறுவானுமே அச் சிறந்த பொருள் களை நுகரப் பெற்றக்கால், அவற்றின் அருமை பெருமை யுணர்ந்து, அவை தம்மைப் பாராட்டுவான். அதுபோலவே, பகலவனில் லாப் பாழ் நிலத்திற் கிடப்பாரே பகலவனருமையும் அவன்றன் றெய்வ மாட்சியும் நன்குணர்வாராவர்.

.

ாது

இஞ்ஞான்று பகலவன் வெளிச்சத்தில் பை L விட பயிலும் நம்மனோர், அவன்றன் றெய்வத் தன்மையினை நன்கு உணராராயினும், பல்லாயிர ஆண்டுகளுக்குமுன் நிலத்தின் தென் கோடியினை யடுத்த குமரிநாட்டின் கண் உயிர்வாழ்ந்த நம்முன்னோர்கள் இை யிடையே சில திங்கள் இருளிற் கிடந்து வருந்தினவராதலின், அவர் பகலவனைக் கண்ட அளவானே சொல்லுக்கடங்காக் களிப்புடையராய், அவனை வணங்கியும் வாழ்த்தியும் உயிர் வாழ்வாராயினர். குமரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/328&oldid=1587435" இலிருந்து மீள்விக்கப்பட்டது