உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா

297

என்று ஓதுவாராயினர். உலகத்தைப் படைத்த முதல்வன் அவ்வுலகத்தின் வேறாகவே நில்லாது, அவ் வுலகத்தோடு உடனுமாய் நிற்பன் என்பதே சைவ சித்தாந்த முடிபாம். இஃது,

“உலகேழுஎனத் திசைபத்தெனத் தானொருவனுமே பலவாகி நின்றவா தோணோக்க மாடாமோ.’

மாணிக்கவாசகப் பெருமான் அருளிச் செய்த

என்று வாற்றானும்,

“உலகமே உருவமாக யோனிகள் உறுப்பதாக.”

என்று அருணந்தி சிவனார் அருளிச் செய்தவாற்றானும் அறியப்படும். உலகமே உருவமாய் நிற்கும் முதல்வன் அவ்வுலகத் தினுள்ளும் ஒளிவடிவங்களையே திருமேனியாய்க் கொண்டு முனைந்து நிற்பனென்பது,

“தேயமா ரொளிக ளெல்லாஞ் சிவனுருத் தேச தென்னார்.”

எனப்போந்த சிவஞான சித்தித் திருச் செய்யுளானும், “அவனன்றி வான்மீன்களும் விளங்குதலில்லை; ஞாயிறு திங்களும் விளங்குதலில்லை" எனப்போந்த சுவேதாச்சுவதர உபநிடத உரையானும் நன்கு தெளியப்படும். ஆகவே, மயில்மேல மர்ந்த முருகன் வழிபாடு கீழ்கடல்மேல் அமர்ந்த தெய்வ ஞாயிற்றின் வழிபாடே ஆதல் தெற்றெனப் பெறப்படும். காலையிற்றோன்றும் புதுஞாயிறு இளமைச் செவ்வியுடைய தாதலால் அதன்கண் நிற்கும் இறைவன் முருகனெனப் பட்டான். முருகனென்பது இஞைனென்னும் பொருளைத் தருந் தனித் தமிழ்ச் சொல்லாகும். இங்ஙனம், பகலவனொளியில் அமர்ந்து உலகத்துள்ள மன்னுயிர்கட்கு அருள் வழங்கும் எல்லாம்வல்ல இறைவனே, பண்டைத்தமிழ்ச் சான்றோரால் முருகனாக வைத்து வழிபடப்பட்டமை காண்க. இவ்வாறு இயற்கைத் தோற்றத்தின் கண் விளங்கும் முதல்வனாகிய முருகன் வழிபாடு எல்லாச் சமயத்தார்க்கும் எல்லாத் தேயத்தார்க்கும் ஒத்த உரிமைப்பாடு உடையதாதலின், அதன்கட் கடவுளிலக்கணத் துக்கு மாறாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/330&oldid=1587437" இலிருந்து மீள்விக்கப்பட்டது