உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

மறைமலையம் – 21

சைவ

ஏதுமில்லாமை தானே விளங்கும். இவ் வாறன்றிப், பிறப்பு இறப்பு இல்லா முழுமுதற்கடவுளாகிய முருகப் பிரானுக்கு அருவருக்கத் தக்க பிறப்பினை ஏற்றும் மேற்காட்டிய கதைகள் சித்தாந்தத்துக்கு ஒரு சிறிதும் உடம்பாடாகாமையால் அவை அறிவுடையோரால் தழுவற் பாலன அல்ல என்பதூஉம், விடியற்காலையிற் கீழ்க்கடற்பாற் றோன்றும் பகலவனில் இறைவனை வழிபடும் இயற்கை முருகப்பிரான் வழிபாடே அறிஞர்களால் உவந்து ஏற்றுக் கொள்ளப்படுமென்பதூஉம் நன்கெடுத்து விளக்கப் பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/331&oldid=1587438" இலிருந்து மீள்விக்கப்பட்டது