உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

18. சிவபெருமான் திருவுருவ

வழிபாட்டின் உண்மை

இனிக், காலையிலெழுந்து நடுப்பகலில் இயங்கி மாலையில் மேல்பால் வயங்கும் ஞாயிற்றில் நிற்பானான முதல்வனே சிவபெருமானென வைத்துப் பண்டைச் சான்றோரால் வழி படப்பட்டனன். மாலை ஞாயிற்றின் ஒளி செக்கச் செவேலெனச் சிவந்து நிற்றலின் அதில்வைகும் இறைவன் சிவந்த நிறத்தை யுடைய சிவனெனப்பட்டான். அஞ் ஞாயிற்றினொளி தோய்ந்து நெருப்பெனச் சுடர்ந்து விளங்கும் மேல்பால் வானிற் பரந்த முகிற் குழாங்களே அப் பருமானுக்குச் செக்கச் சிவந்த சடைக்கற்றைகளாக வைத்து மொழியப்பட்டன. அம் முகிற்குழாங்களினிடையே மிளிரும் பிறைத்திங்களே அப் பெருமான் சடைக்கற்றைமே லுறையும் வெண்பிறையாக வத்து விளம்பப்பட்டது. அம் முகிற்குழாங்களில் தோய்ந்த நீராவியே அப்பெருமான் சடைமேலுறையுங் கங்கை நீராக வைத்துக் கூறப் பட்டது. இங்ஙனமெல்லாம் மாலைக் காலத்தில் க தோன்றும் செஞ்ஞாயிறும், அஞ் ஞாயிற்றின் ஒளிவிராய் விளங்கும் வானின் தோற்றமுமே சிவபெருமானாக வைத்து வழிபாடு ஆற்றப்பட்டமை அறியவல்லார்க்கு இஃது எல்லாச் சமயத் தார்க்கும் எல்லாத் தேயத்தார்க்கும் உரிய இயற்கைத் தெய்வ வழிபாடேயாவதன்றி இதன்கட் கடவுளிலக்கணத்துக்கு மாறாவது ஏதும் இல்லாமையும் வெள்ளிடைமலைபோல் விளங்கா நிற்கும்.

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/333&oldid=1587440" இலிருந்து மீள்விக்கப்பட்டது