உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

301

19. விநாயகர் வழிபாட்டின் உண்மை

இனி, மக்களின் அறிவு விளக்கத்திற்கு இன்றியமையாத தாய் நிற்கும் ஒலியின்கண் முனைத்துத் தோன்றும் இறைவனே யானைமுகமுடைய பிள்ளையாராக வைத்துப் பின்றைக் காலத்துச் சான்றோரால் வழிப்படப்பட்டனனென்பதை முன்னரே விளக்கிப் போந்தாம். ஒலிவடிவெல்லாம் வட்டமும் வரியுங் கூடிய கூட்டமேயாகும். ஆகவே, வட்டமாகிய முகமும், அம் முகத்தினின்று வரிவடிவாய்த் தொங்கும் தும்பிக்கையும் உடைய யானையின்வடிவு, ஒலி வடிவில் நின்ற இறைவனைக் கற்றா ரேயன்றிக் கல்லாரும் எளிதில் உணர்ந்து வழிபடுதற்கு ஏற்ற அடையாளமாதல் கண்டே நம் ஆசிரியர்கள் எல்லாம் வல்ல முதல்வனை யானை முகமுடைய திருமேனியில் வைத்து வழிபட லாயினார். இவ்வுண்மை உணராத கயவர்கள் பிறப்பு இறப்பு ல்லா மிக அருவருப்பான பிறப் பிறப்புக் கதைகளைக் கட்டிச் சைவசமயத்துக்குப் பெருங்தீங்கு இழைக்கலாயினர். ஆதலால், மெய்யறிவு வேட்கும் மேன் மக்கள் அப் பொய்க் கதைகளை அறவே தொலைத்து ஓங்கார வடிவில் நிற்கும் இறைவன் வணக்கமே யானை முகமுடைய பிள்ளையார் வணக்கமாம் என்று கடைப்பிடித்தல் வேண்டும்.

நம் விநாயகப் பெருமானுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/334&oldid=1587441" இலிருந்து மீள்விக்கப்பட்டது