உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

20. முருகப்பெருமானுக்கு ஆறுமுகமும், கோழிக்கொடியும் கூறிய கருத்து

இவையெல்லாங் கூறியது ஒக்கும்; முருகப்பிரானுக்கு மட்டும் ஆறு திருமுகமும் பன்னிரண்டு கைகளுங் கூறுதல் எற்றுக்கெனின்; நான்கு திசைகளும் வானும் பாதலமும் என்னும் ஆறிடங்களிலும் நிகழும் எல்லா நிகழ்ச்சிகளையும் இறைவன் காணவல்லன் என்பது அறிவித்தற்கே ஆறு திருமுகங்களும், அவ்வாறு திருமுகங்களுடைய ஆறு மேனிகளுக்கு ஏற்பப் பன்னிரு திருக்கைகளும் இறைவனுக்கு உளவாக வைத்து, வணங்குதற்கு எளியதோருருவம் நம்பொருட்டு ஆன்றோர் களால் வகுக்கப்பட்டது. இக்கருத்துப் பற்றியே றைவன் ஆயிரந்தலைகளும், ஆயிரங் கண்களும் ஆயிரம் அடிகளும் உடையனென" வடமொழி உபநிடதமுங் கூறுவதாயிற்று.

கூறுதல்

66

அற்றாயினும், முருகப் பிரானுக்குக் கோழிக்கொடி யொன்றுளதெனக் என்னையெனின்; விடியற்காலையிற் றோன்றும் ஞாயிற்றின்கண் முனைத்து விளங்கும் இறைவனே முருகனெனப்பட்டான் என்பதை முன்னரே விளக்கிப் போந்தாம். அவ்விடியற்காலையில் ஞாயிறு கீழ்பால் எழுகின்ற நேரத்திற் கோழிகூவுதலை எவரு மறிவர். இங்ஙனம் இறைவனது வருகையைப் புலரிக் காலையில் முன்னறிவிக்கும் இயைபுபற்றி அக் கோழியின் உருவானது அவன்றன் கொடியின்கண் உளதாக வைத்து இயைபுபடுத்தப் பட்டது.தொலைவிலொருவன் தேரூர்ந்து வருங்கால் அவன்றன் தேரிற்கட்டிய கொடியே முதலிற் கண்ணுக்குப் புலனாதல் போல, இறைவன் ஞாயிற்று மண்டிலமாகிய தேரூர்ந்து வருங்கால் அவனது வருகையினைக் கூறி முன்னறிவிக்குந் தொடர்பு பற்றிக் கோழியானது அவன் கொடிக்கண் உளதாக

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/335&oldid=1587442" இலிருந்து மீள்விக்கப்பட்டது