உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

சிறந்த

21. முடிவுரை

இதுகாறும் விளக்கியது கொண்டு, இறைவன் தவத்திற் முனிவர்களாலுங் கேட்டறியப்படாதவனாய்ப்

பிறப்பில்லாமையின் இறப்புமில்லாதவனாய்ப், பிறப்பால் வருஞ் சுற்றத் தொடர்புமில்லாதவனாய் ஐம்பொறிகளின் உதவி யின்றியே எல்லாவற்றையும் அறிபவனாய் இருப்பனென்பதூ உம், அங்ஙனம் எல்லாங் கடந்த ஆண்டவன் தானாகவே இரங்கிவந்து தன் அருளுருவைக் காட்டினாலன்றி அவன்றன் அருமைத் திருவுருவினை நம்மனோர் காண மாட்டுவார் அல்லரென்பதூஉம், மாணிக்கவாசகரை யொத்த நம்மாசிரியன் மார் ஒருசிலர்க்கு இறைவன் அவர் தங் கட்புலனாய்த் தோன்றிக் காட்டிய திருவுருவே அவன்றன் உண்மையுருவாய் எம்மனோர் வழிபாட்டை ஏற்று எமக்கு இப் பிறவித் துன்பத்தை யறுத்து மீளா வீடுபேற்றின்பத்தில் எம்மை நிலைப்பிக்கும் என்பதூஉம், இவ்வாறு நம்மாசிரியன் மார்க்குத் தோன்றிய இறைவன் அருளுருவம் மின்னொளி போற் றோன்றிச் சடுதியில் மறைவ தாதலின் அதனைப் பிறப்பு இறப்புக்களுட் படுத்துப் பொருந்தாப் பொய்யுரை கிளக்கும் புராணப்புல்லுரைக எத்தனையும் ஒருங்கே விலக்கற்பாலனவா மென்பதூஉம் இனிது உணரப்படும் என்க. ஓம்சிவம்.

கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா - முற்றும் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/337&oldid=1587444" இலிருந்து மீள்விக்கப்பட்டது