உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

மறைமலையம் – 21

மிலக்கணங்க எல்லாம் முடிய

வடுத்துக்கொண்டு முன் னொடுபின் மாறுகோளின்றி வரம்பு குறித்துரைக்கு நூல், காழிதமிழ்த் துறைபழுதறக் கண்டு முழுமுத லறிவினராய் விளங்கிய, ஆசிரியர் தொல்காப்பியனார் இயற்றிய தொல்காப்பியம் ஒன்றுமேயாம். இதன்றிற மீண்டு விரிப்பிற் பெருகுமாதலா லீண்டைக்கு வேண்டுமளவே தந்து நிறுத்தி வேறுசெல்வாம்.

அகப்பொருள்

இனி அவற்றுள், அகப்பொரு ளென்பது* (நச்சினார்க் கினியம்) “ஒத்த அன்பானொருவானு மொருத்தியுங் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம் அக்கூட்டத்தின் பின்ன ரவ்விருவரு மொருவருக் கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வா றிருந்ததெனக் கூறப்படாததாய் யாண்டும் உள்ளத் துணர்வே நுகர்ந்து இன்ப முறுவதோர் பொருள்" கருதி நிற்பதாம். ங்ஙனம் புறம்படுதலின்றி யுண்ணிகழு மொழுக்கத்தினைப் பலவாறு கூறுபடுத்து விளக்குவதாகலி னிதனை அகத்திணை யென்றும் வழங்குப. இதனைக் களவொழுக்க மெனவுங் கற்பொழுக்க மெனவும் பகுத்தெடுத்துக் கொண்டவற்றிற்குக் கைகோளெனப் பெயர்நிறீஇ நூல்கள் விளக்குமாறுங் காண்க. இவ்விய லறிந்தார்க்கன்றி யேனை யோர்க்கு அறிவுப் பொருளாகிய ஆன்மாவின்க ணிகழும் பஃறலைப் பட்ட வுணர்வுகளி னியனுண்மை யறிதல் செல்லா தென்பதூஉம், பற்றியே ஆங்கில நூலாரும் பிற்காலத்தல் உளவியல் என்னும் அகப்பொருணூாலைக் குறிக்கொண் டாராய்ந்து கொள்வா ராயின ரென்பதூஉம் உணர்ந்து கொள்க. இனி வட நூலாசிரியர் னிவ தாம் வேறு பகுத்துக்கொண் டுரைக்கும் அறமுதலிய நால்வகை யுறுதிப் பொருள்களு ளிவ்வகப் பொருணூல் எதன்பாற் படுவதெனின், இஃதின்பப் பகுதியினையே நுதலி யாராய்தலி னவ்வின்பப் பொருட்கண்ணதா மெனவும் எனைப் புறப் பொருணூால் அறம் பொருள் வீடாகிய ஏனை மூன்றனையு மொருங்காராய்தலி னப்பொருட் கண்ணதாமெனவும் பொருளிலக்கணம் வல்லா ரெல்லாரு மினி துணர்வ ரென்க. அல்லதூஉம் இன்பமேயன்றி யேனைப் பொருள்கள்

து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/57&oldid=1587164" இலிருந்து மீள்விக்கப்பட்டது