உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தரக் காஞ்சியாக்கம்

25

அகத்தேகரந்து படுக்கப்படும் நீரவல்லவாய்ப் புறம்படுதல் காண்டுமாதலானும், இன்பப்பொரு ளொன்றுமே உரை வரம்பு நிறுத்திப் பிறரு ணருமா றுரைப்ப வாராமையானும், தெய்வப்புலமை நக்கீரனார், நச்சினார்க்கினியரை யுள்ளிட்ட ஆசிரியன்மா ரெல்லாரு மிங்ஙனமே கூறுதலானும் இன்பம் அகப் பொருணூலினும் ஏனை மூன்றும் புறப்பொருணூலினும் வைத்தாராயப் படுமா மென்பது கடைப்பிடிக்க இன்னு மிவ்வகத்தினை நுண்பொரு ளெல்லாம் இறையனாராகப் பொருள், தொல்காப்பியம் முதலிய விரிந்த நூல்களிற் காண்க.

புறப்பொருள்

இனிப் புறப்பொருளென்பது* (நச்சினார்க்கினியம்) “ஒத்த அன்புடையார் தாமே யன்றி யெல்லார்க்குந் துய்த்துணரப் படுதலானும், வை யிவ்வா றிருந்ததெனப் பிறர்க்குக் கூறப்படுதலானும், அறம்பொருள்வீடென்னும் மூன்று பொருள்களை நுதலி நுவலுவதாம். அதுதான் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்டினை யென ஏழு பகுக்கப்பட்டு, வெட்சி முதல் வாகை யீறாகக் கிடந்த ஐந்திணையுள் அறக்கூறுபாடு பொருட்கூறுபாடுகளும், காஞ்சித் திணையுள் அவற்றது நிலையாமையும், பாடாண் டிணையுள் மக்களையுங் கடவுளரையும் பாடுதற்கண் வரும் பொதுவியற் பொருட் டொகையும் முறையுள்வைத் தாராயப் படும். இனி இவற்றின் பரப்பெல்லாம் தொல்காப்பியம், புறப்பொருட் பன்னிருபடலம், இதன் வழி நூலாகிய புறப்பொருள் வெண்பா மாலை முதலிய நூல்களிற் கண்டு கொள்க. புறப்பொருட் பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பா மாலையாகிய இரண்டுநூற் பொருள்களும் ஆசிரியர் தொல்காப்பியனார் பொருளியலோ டொருசில விடங்களிற் சொன்மாத்திரையின் மாறுகோ ளுறுவதுபோற் றோன்றுதலைக் கண்டு மருண்டு பொருளிய லறிவு வாய்ப்பப் பெறாதார் சிலர், அவற்றின் பொருணுட்ப முணர்ந்து பொருத்த மாட்டாமையிற் பெரும் பேதுற்றத் தமக்குத் தோன்றியவா ரெல்லாங் குழறுபடக் கூறுவர். அற்றேல், ஆசிரியர்- தொல்காப்பியனார் புறப் பொருளை எழு வகையாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/58&oldid=1587165" இலிருந்து மீள்விக்கப்பட்டது