உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

-

மறைமலையம் – 21

L

ரு

ரு

பிரித்துக்கொண்டிலக்கணங் கூறாநிற்ப, மற்றதனொடு மலைந்து புறப்பொருட் பன்னிருபடல முடையாரும், வெண்பாமாலை யுடையாரும் அது தன்னைப் பன்னிரண்டு கூறுபடுத் திலக்கணங் கூறுமாறென்னை யெனக் கடாவுவார்க்கு, நிரைகவர்தலும் அதனை மீட்டலும் வெட்சித் திணையாமென நிறுத்திய ஆசிரியர் தொல்காப்பியனாரொடு நிரைகவர்தலு மீட்டலுமாகிய அவ்விரண்டு வினைக்கும் ‘வெட்சி’ 'கரந்தை’ யென வேறுவேறு பெயர் நிறீஇக் கூறிய ஏனை யாசிரியருரை முரணுறு மென்றல் சொன்மாத்திரையே யன்றிப் பொருள் வேறுபாடின்மையானும், அந்நூற்பொரு ளெல்லாம் மலைவற வொருங் குணர்ந்த ஆசிரியர்-சிவஞனா யோகிகள் “இவை யிங்ஙனம் வேறுபடினும் புணர்ச்சி முடிபும் சொன் முடிபும் ாருண் முடிபும் வேறுபடாமையின் மரபுநிலை திரியாவாயின. இவ்வுண்மை யுணராதார் பன்னிருபடலம் முதலிய நூல்களை வழீஇயினவென் றிகழ்ந்து, பன்னிரு படலத்துள் வெட்சிப்படலந் தொல்காப்பியனார் கூறிய தன்றெனத் தொல்லாசிரியர் வழக்கொடு முரணித் தமக்கு வேண்டிய வாறே கூறுப" என்று தொல்காப்பியப் பாயிர விருத்தியி லோதுதலானும் அந்நூல்களிப்பொருட் பரப் பெல்லாம் ஒருவழிக் கொண்டு நிறுவிவிளக்குதற்கண் ஒரு கருத்தினவா மென்று விடுக்க. இதுகாறும் பொருளிலக்கண வரலாற்றுள் ஈண்டைக்குப் பயன்படுவன சில தந்து காட்டினாம்.இங்ஙன மெழுதிய விவை ‘மற்றொன்று விரித்தல்’ போற் றோன்றினும பொருளிலக்கணப் பயிற்சி குன்றிய விக்காலத் திலிவ்வெதிர் மறுப்பினை யுணர்வாருண் மைப்பொருளெளி துணர்ந்து கோடற்பொருட்டும், இவ்வெதிர் மறுப்பின்கண் ஆண்டாண்டு அளவை நூன் முறையில் நடந்துசெல்லு நெறிக்கிடையே எடுத்துக் காட்டுதற் தேவியாதற் பொருட்டும் 'முன்மொழிந்து கோடல்' என்னும் உத்தியா னிங்ஙன மெழுதினாமென்ப துண்மையா னோக்குவார்க் கெல்லா மினிது விளங்குமாதலி னேனையார் கூறுமுரையை யொரு பொருட்படுத்தா மென்றொழிக. இனி அப்பேலிப் புலவர் வரைந்து விடுத்த போலி மறுப்பினை முறையே யாராய்ந்து செல்வாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/59&oldid=1587166" இலிருந்து மீள்விக்கப்பட்டது