உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சோமசுந்தரக் காஞ்சியாக்கம்

காஞ்சித்திணை

-

27

இனிக் காஞ்சித்திணை யென்பது உலக நிலையாமை புலப்படுக்கும் ஒழுக்கமாம். அதுதா னுலகியற் பொருள் கொண்டுவரும் நிலையாமைக் குறிப்பின்கண் வருவதூஉம், அந்நிலையாமைக் குறிப்பேதுவாக வுலக வொழுக்கத்தி னுவர்ப்புத் தோன்றி வீட்டிய னெறியறிந்துறுதி கூடுமா றறிவுறுத்தற்கண் வருவதூஉம்,* (நச்சினார்க்கினியம் + தொல் - புறத்திணையியல். எஅ. + தொல் - புறத்திணையியல் - எரு) "வீடுபேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையாமையைச் சான்றோர் சாற்றுங் குறிப்பின் கண் வருவதூஉ மென்னும் பாகுபாட்டான் மூன்றாம். இம்மூன்றும் உள்ளடங்கப் "பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற் றானு, நில்லாவுலகம் புல்லிய நெறித்தே” என்று ஆசிரியர் தொல்காப்பியனாருங் கூறுவா ராயினர். இதனுண்பொரு ளெல்லாம் ஆசிரியர் நச்சினார்க்கினியர் அச்சூத்திரத்திற் குரைக்கும் விழுமிய நல்லுரைக்கட் கண்டு கொள்க. இவ்வாறு இத்திணைப் பொருட் பாகுபாடும் பிறவும் அறிவுடையார்க் கெல்லா மினிது விளங்கிக் கிடப்ப, அவற்று ளான்றுதானு L மறிய மாட்டீராய் அவ்விலக்கணப் பொருளெல்லா மொருங்கு நிரம்பி முதிரப் பெற்ற பேரறி வுடையீர் போலப் பெரிது மிறுமாந்து மயங்கி யெதிர் புகுந்து நின்று காஞ்சித்திணை ‘அறிவன் றேயமுந் தாபதப் பக்கமும் பற்றி யுரைத்தலாலஃதிரு வகைத்து' என்ற அதற்குப் பாகுபாடு கூறினீர். இங்ஙனம் ஓராசிரியரு முரைப்பக் கேட்டிலம். வீடேதுவாக நிலையாமை யுணர்தலும், நிலையாமைக் குறிப்பேதுவாக வீடுபே றறிவுறுத்தலு மென்னு மிரண்டனுட் பின்னதாகிய நிலையாமைக் குறிப்பை யிரண்டு கூறுபடுத்துக் காட்டுதற்பொருட்டு நச்சினார்க்கினியர் "விடேதுவாகலின்றி

ஆசிரியர்

நிலையாமைக்

குறிப்பேது வாகலுங்கொள்க. இஃது அறிவன் றேயமுந் தாபதப் பக்கமும் பற்றி நிலையின்மைக் குறிப்புப் பெற்றாம்” என்று கூறினாரன்றிக் காஞ்சித்திணையே யவ்வாறு பகுக்கப்படு மென்று யாண்டு முரையாமையானும், வாகைத் திணைப் பகுதியாகிய 'அறிவன்றேயமுந் தாபதப் பக்கமும்” பற்றிக் காஞ்சித் திணையைப் பகுத்துக்கோடு மென்றல் பொருளிலக்கண

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/60&oldid=1587167" இலிருந்து மீள்விக்கப்பட்டது