உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

மறைமலையம் – 21

மறியாதார் குழறுபாட் டுரையா மாதலானும், நீவிர் அறிவு மயங்கிப் பகுத்த அவ்விரண்டனுட் சோமசுந்தரக் காஞ்சி எதன்பாற் படுவதெனக் கடாவுதல் போலியா மென்றெழிக.

-

இனி ஆசிரியர் தொல்காப்பியனாரும் நச்சினார்க் கினியருங் கூறுமாறு கிடக்க, காஞ்சித் திணையை அறிவன் றேயமும் தாபதப் பக்கமுமென விரண்டாகப் பிரித்துக் கோடலே பொருத்த முறுவதா மென்றுரைக்க ஒருப்படு வீராயின், மறக்காஞ்சி, பேய்க்காஞ்சி, வஞ்சினக்காஞ்சி, தொடாக்காஞ்சி, தாங்கரும்பையுள், முதுபாலை முதலியுவும் பிறவும் யாண்டடங்கு மெனக் கடாவுவார்க்கு இறுக்க லாகாமையின், அவ்வாறு அவ்வாறு கூறுதலுங் குன்றக் கூறல் மாறுகளைக் கூறல் முதலான குற்றங்கட் கிடனாமென்ப தினியேனு மறிந்து கொள்க. அற்றேல், நீவிர் கூறிய அம்முத்திறப் பகுதியில் அச் சோம சுந்தரக்காஞ்சி எதன்கட்படுவ தென்று உசாவுவிராயிற் கூறுதும். வாளா துலகியற்பொருணிலையாமை மாத்திரையே கிளந்து கூறுதலிற் ‘சோமசுந்தரக்காஞ்சி’ உலகியற்பொருள் கொண்டு வரும் நிலையாமைக் குறிப்பினைக் காட்டுங் காஞ்சித் திணையின்பாற் படுவதாம். இதற்கு, "மாற்றருங் கூற்றம்” என்னுஞ் சூத்திரவுரை முகத்தில் ஆசிரியர் நச்சினார்க்கினியர் இது முற்கூறிய காஞ்சித்திணை வீடேதுவாக வன்றி வாளாது நிலையின்மை தோன்றக் கூறும் பகுதி கூறுகின்றது.” என்று தெளியவெடுத்துக் கூறுதலே சான்றாமாகலின், இதுதானு முணரமாட்டாது ாது நீவிர் பெரியதோர் ஆரவாரஞ் செய்தது தலையாய வறிவினோ ரெல்லாரானும் “மைத்துனர் பல்கி மருந்திற் றெளியாத பித்தன் என்றெள்ளி நடையாடற் கேது வாமென் றொழிக.

66

இனிக் காஞ்சி யென்பது உலகியற் பொருட் பெற்றி தேர்ந்த நல்லிசைப் புலவர் அதனியல்பு அறியமாட்ட ாதாரைத் தெருட்டி அவர்க்கு வீடுபேற் றுறுதிப் பயனையும் அதனை யெய்துதற்கு வேண்டுங் கருவிகளையு மொழிந் துறுதிபயக்கு மொழுக்கமாகலின், “என் குருவே என்று விளித்துக் குருவுக்கு மிஞ்சிய சீடர்போல அவர்க்குக் கூறிய தென்னாய் முடியும்?” என்று இடக்கருரைகளை மேன்மேற்றலைப்பெய்து வினாயினீர். மேலே, காஞ்சித்திணை யென்பது முத்திறப் பட்டு உலக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/61&oldid=1587168" இலிருந்து மீள்விக்கப்பட்டது