உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தரக் காஞ்சியாக்கம்

29

நிலையாமை கூறுவதூஉம், அதுகொண்டு வீடுபேற்றுறுதிப்பய னறிவுறுப்பதூஉம், வீடுபேறு நிமித்தமாக உலகநிலையாமை புலப்படுப்பதூஉ மெனப் பெயர்பெறுமா மென்பது இனி தெடுத்து விளக்கினா மாதலின், அம்முக்கூற்றுள் லக நிலையாமைக்கட்படுவதாகிய சோமசுந்தரக்காஞ்சி'யை ஏனைப் பகுதிக்கண் மயங்கப் படுத்து அவ்வாற்றானதனை வழுவுடைத்தெனக் கூறுதன்மேலும், அதனாசிரியனையு மிழித்துக் கூறுவான் றலைப்பட்டது நுமக்குப் பெரிதும் ஏதமாய் முடிந்தது காண்க.

அற்றன்று, உலக நிலையாமை தேர்ந்த தவமுது மக்கள் பிறர்க்கு வீடுபேற் றுறுதிப் பயனறிவுறுத்துதலே காஞ்சித்திணைப் பொருளென்பி ராயின், அதுவே அப்பொருள் முறையா மென்பதற்கு cM ரெடுத்துக் காட்டிய மேற்கோளியாது? யாங் கூறியதே மேற்கோளாமெனின், நீர் தழுவிக் கொண்டுரைத்த ஆஞ்சிக்காஞ்சி, தாங்கரும்பையுள், முதுபாலை என்பவற்றிற் கெல்லா மென்சொல்ல வல்லீர்? இவற்றை யுய்த்துணரவல்லார்க்கு நும் வாய்மொழியே நும் முரணை யறுக்குங் குலிசப் படையாய் முடிந்திடுதலின், நும் மாரவார விகழுரை யெம்மை யென்செய்ய வல்லும்? நுமது மேற்கோளைத் தாங்குந் திண்ணி வெழுவெனக் கனவுகண்டு நீவிரெடுத்துக் காட்டிய மதுரைக்காஞ்சியே நுமக்குமாறாகி நாம் மேலே விரித்து விளக்கிய முக்கூற்றுக் காஞ்சித்திணையுள் ஒன்றன்கட் படூஉங் காஞ்சியாய் முடிதலின், அஃதெமது மேற்கோளையே மேன்மேலும் வலியுறுத்துங் கருவியா யமைந்தவாறு காண்க. இங்ஙனம் விரிந்த காஞ்சித் திணைப்பொருட் பாகுபாடறியாது நீர் குழறிய புறங் கூற்றுரைகள் ஆசிரியர் நச்சினார்க்கினிய ருரைப் பொரு ளோடு பிணங்கி ஆசிரியர் - தொல்காப்பியனார்க்கு மறியாமை யேற்றுதலின் நும்மோ டுரையாடுதலும் எமக்குப் பெரியதோ ரிழுக்காமென் றொழிக.

கையறு நிலை

னி, நீவிர் கையறுநிலையைச் சுட்டி வழூஉப்பட மொழிந்த குழறுபாட் டுரையிய லொருசிறி தாராய்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/62&oldid=1587169" இலிருந்து மீள்விக்கப்பட்டது