உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

மறைமலையம் – 21

செல்வாம். “மையன் மாலையாங் கையறு பினைய” என்னும் புறநானூற்றுச் செய்யுளிற் போலக் 'கையறுதல்' என்பது ‘செயலறுதல்' என்னும் பொருட்டாம்; எனவே, செயலறுதற் கேற்ற காரணந் தோன்றியவழி ஒருவன் கையற்று நின்ற தன்மை கையறுநிலையாம். இனி, அந்நிலையைப் புலப்படுத்துக் கூறுவதாகிய செய்யுளும் அப்பெயர்த் தாயிற்று. என்றிங்ஙன மெல்லா மிச்சொன் னிலையை நுணுகி யாய்ந்திடின், ஒருவன் கையற்றுக் கூறுவன வெல்லாங் கையறுநிலை’ யாதற் கேற்குமாமென்பதூஉம், அக்கையறுநிலை தான் றோன்றுதற்கு

66

முன்னிகழுங் காரணம் ஆண்பாலாதல் பெண்பாலாத லவ்விருவரு மொருங்கேயாத லிறந்து படுவதா மென்தூஉம், ங்ஙனம் வரையறை யின்றிக் கையறுநிலை தோன்றுதற் கேற்ற காரண முள்வழி யெல்லாம் அது தோன்றுமென்பது பற்றியே புறநானூற்றுரையாசிரியர் 'இனி நினைந் திரக்க மாகின்று” என்னுந் தொடித்தலை விழுத்தண்டினார் பாடிய செய்யுட் குறிப்புரையில் “இளமை கழிந்து இரங்கிக் கூறுதலான் இதுவுங் கையறுநிலை யாயிற்று" என்றுரை கூறினா ரென்பதூஉம் மினிது விளங்கும். இது கிடக்க.

-

அங்ஙன மச்சொன் னிலையை நுணுகி நோக்கும் வழி வரையறையின்றி யஃதங்ஙனம் பொருள்படுதற் கேற்குமாயினும், ஆசிரியர் தொல்காப்பியனார்* (தொல் புறத்திணையில்) "கழிந்தோர் தேஎத் தழிபட ருறீஇ, யொழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்” என்று வேறு அதனைப் பிரித்தெடுத்துக் காண்டு பெண்பா லதிகாரப்பட்டு வருகின்ற விடத்து வைத் தோதினாராகலான், அம்முறைபற்றி ஆண்பாலும் பெண்பாலும் ஒருங்கு துஞ்சிய வழியே ‘கையறுநிலை' கூறப்படு மென்பது பெறாமோ வெனின்; பெறாமன்றே, என்னை? மூன்று கூறுபடுங் கையறுநிலை' யுட் பெண்பாலு மாண்பாலு மொருங்கு துஞ்சிய வழித்தோன் றுங் ‘கையறுநிலை' மாத்திரையே கூறியதன்றி, அதனாற் பெண்பாலு முடன் றுஞ்சியவழித் தோன்றுவ தொன்றே ‘கையறுநிலை’ என்னும் யாப்புறவு பெறப்படாமையி னென்பது. இனிச் சூத்திரத்தா லங்ஙனம் யாப்புறவு பெறப்படா தாயினும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் கணவனொடு மனைவியர் கழிந்துழி அவர்கட்பட்ட அழிவுபொரு ளெல்லாம் பிறர்க்கு அறிவுறுத்தித் தாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/63&oldid=1587170" இலிருந்து மீள்விக்கப்பட்டது