உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

சோமசுந்தரக் காஞ்சியாக்கம்

31

இறந்துபடா தொழிந்த ஆயத்தாரும் பரிசில்பெறும் விறலியருந் தனிப்படருழந்த செயலறு நிலைமையானும்” என்றுரை விரித்துக் கூறுதலின் அதன் கண் வைத்து அவ்யாப்புறவு கோடுமென் றுரைத்திராயின், அஃதாசிரியர் கருத்தறியாது கூறிற்றாம். என்னை? அவ்வாறு கூறுதலே ஆசிரியர் கருத்தாயின், முன்னுரைத்த வு வுரையோடு மாறுற்றுக் குறிப்புரையில் ஆண்பாற் கையறுநிலை மன்னைக் காஞ்சியு ளடங்கும்" என்றும் “இன்னனென் றிரங்கிய மன்னையானும்” என்புழி தனை ‘ஆண்பாற் கையறுநிலை' யெனினு மமையும்” என்றும் பறுநிலை'யெனினு உரைக்குமாறென்னை? இந்நுட்பப் பொருடேற மாட்டாது நீர் குழறிய அறிவில்லுரையால் ஆசிரியர் - நச்சினார்க்கினியரும் ஓரிடத்திலேயே யங்ஙனம் முன்னொடுபின் மலைவு படக் கூறுதலாகிய அத்துணை யறியாமை உடைய பெறப்படுதலின், இத்துணைக்கு மிடஞ்செய்து கொண்ட நீவிர் மிகப் பெரியர்தா மென்றொழிக.

66

ரன்

று

இனியாமெடுத்துக்கொண்ட மேற்கோளை வலியுறுத்தாது அதனை முதலறக் களைந்தெறியுங் கருவியா யெழுந்தமையின் ஆசிரியர் நச்சினார்க்கினிய ருரை கொள் ளாம்; மற்று ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிய சூத்திர யாப்புப் பற்றியே எமது மேற்கோளை நிறுவி விளக்குது மென்று கூறவும் ஒருப்படுவீர்; ஆகலான் ஆசிரியர் சூத்திர யாப்பும் நும்மத முழுமுதல் துணிக்கும் நவிய மாமாறும் ஒரு சிறிது காட்டுதும். கொழுநனொடு மனைவிய ரிறந்துபட்ட வழித் தோன்று வதாகிய செயலறுதலே ‘கையறுநிலை' என்பது ஆசிரியர் தொல் காப்பியனார் கருத்தாயின், உலக வொழுக்கங்களை யெல்லாம் அகம் புறமென வகுத்து இலக் கணங் கூறுவான் புகுந்த ஆசிரியர்க்கு ஆண்பாலும் பெண் பாலுந் தனித்தனி யிறந்து பட்டவழி அவ்விறந்து பாடு காரண மாக நிகழும் ஒழுக்கங் களையும் அகப்படுத்து இலக்கணங் கூறாதொழிதல் குன்றக் கூறலாய் முடியுமாதலானும்,

  • “மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலை யிருந்த சீர்சான் முனிவரன் றன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/64&oldid=1587171" இலிருந்து மீள்விக்கப்பட்டது