உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

❖ 21❖ மறைமலையம் – 21

பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த பன்னிரு படலம் பழிப்பின் றுணர்ந்தோ னோங்கிய சிறப்பி னுலகமுழு தாண்ட வாங்குவிற் றடக்கை வானவர் மருமா னைய னாரித னகலிடத் தவர்க்கு

மையறு புறப்பொருள் வழாஅலின்று விளங்க வெண்பா மாலை யெனப்பெயர் நிறீஇப்

பண்புற மொழிந்தனன் பான்மையிற் றெரிந்தே”

-

என்னுஞ் சிறப்புபாயிரத்தானே, ஆசிரியர் தொல்காப்பிய னாரை யுள்ளிட்டு ஆசிரிய ரகத்தியனார் மாணக்கர்பன்னிருவரும் ஒருங்கு கூடிச்செய்த புறப்பொருட் பன்னிருபடலத்தின் வழிநூலாகிய புறப்பொருள் வெண்பாமாலை,

  • “செய்கழன் மன்னன் மாய்ந்தெனச் சேர்ந்தோர்

கையற வுரைத்துக் கைசோர்ந் தன்று” - என்பதனானும்,

"கழிந்தோன் றன்புகழ் காதலித் துரைப்பினு

மொழிந்தனர் புலவ ரத்துறை யென்ன

என்பதனானும்

ஆண்பா றுஞ்சிய வழியுங் கையறுநிலை தோன்றுமென வைத்து அதனிலக்கணங் கூறுதலிற் றொல்காப்பியமும் புறப்பொருட் பன்னிரு ரு படலமும் ஒன்றோடொன்று இணங்காமன் மாறுகொண்டு இரண்டும் மேற்கோளாகாவா யொழிதலே யன்றி, அவற்றின் பொருளொருமை யுணர்ந் துரைத்த ஆசிரியர் - சிவஞானயோகிகள் அளவையுரையோடும் புறநானூற்றுரையாசிரியர் தெரிந்து மொழிகிளவியோடும் பிணங்கி வேறுபடுதலானும், ஆண்பாற்பொருளும் பெண்பாற் பொருளும் வேறுவேறு தழீஇவந்த "நினைக்குங் காலை மருட்கை யுடைத்தே” “யாங்குப் பெரிதாயினு நோயள வனைத்தே” என்னும் புறநானூற்றுச் செய்யுட்க ளெல்லாம் இலக்கண மின்றாய் முடியு மாதலானும் அஃதாசிரியர் கருத்தெனக்கொண்டு துணிவுபட வுரைத்தல் பருப்பொரு ளுருவொடு பருத்துவிளங்கு மடமையா மன்றிப் பிறிதென்னை யென்றொழிக. அல்லதூஉம், தொல்காப்பியமும் பன்னி ரு படலமும் பொருள் பகைக்குமெனக் கொள்ளினும் அவை

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/65&oldid=1587172" இலிருந்து மீள்விக்கப்பட்டது