உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தரக் காஞ்சியாக்கம்

33

யிரண்டுந் தவமாட்சி யான் விரிதரு பேரறிவினராகிய தாபதத் தலைவர் நுண்பொருள் பொதுளப் பண்புற வியற்றிய முதனூல்க ளாகலான், அவை தம்மை ஒருமருங்குபட வைத்துப் பொருளிணங்கக் கொளீஇத் தழீஇக்கோட ல்லலது முழு முதனூல்க ளிரண்டினுள் இஃதாம், மற்றிஃதாகாதெனத் தமக்கு வேண்டியவா றெல்லாம் பழுதுற வுரைப்பது குற்றமா மென்றொழிக. இவ்வாறே வேதநூலினும் ஆகமநூலினும் மாறுகோள் வந்துழி அவைதம்மை அவிரோத நயனஞ்செய்து இணக்கிப் பொருளுரைக்குந் தொல்லாசிரியர் மரபுணர்ந்தீராயி னிவ்வாறெல்லாங் குழறுவீ ரல்லீர். இவற்று ளொன்றுதானும் அறிந்துகொள்ள மாட்டீராய் அழுக்காறுகொண்டு சோமசுந்தரக் காஞ்சிக்கு ஏதேனுங் குற்றங் கூறுதல் வேண்டு மென்னுந் தீய அவாவும்மைப் பிடர்பிடித்து முன் கடவுதலின், அச்சிடப்பட்ட பொருளதிகாரத்தை எளிதிற்பெற்று, அதிற் கையறுநிலை’ வருமிடனைத் தடவிப் பார்த்து அச் சொன்னோக்கம், பொருணோக்கம், அதனுரை நோக்கம் அவ்வுரையின் முன்பின்னுள்ள இயைபு ஏனைப் பொருளிலக்கண நூற்கருத்து முதலியவற்றுள் ஒன்றுதானுங் கண்டு தேறாது நுமக்குத் தோன்றியவா றெல்லாம் ஏதேதோ வெடுத்தெழுதித் தால்லாசிரியர். மரபழித்தன் மேலும் அவர்க்குக் குற்றம் ஏற்றுதலுஞ்செய்து பெரியதோர் தெமெய்திய வும்மைக் கண்டு தூரவொதுங்கிப் போதலே செயற்பாலதாம்.

இனியிவை யெல்லாம் கிடக்க அத்தொல்காப்பியச் சூத்திரத்தையும் வெண்பாமாலைச் சூத்திரத்தையும் ஒருவழிவைத் திணக்கிப் பொருள் சொல்லுமாறு தானியாங்ஙனமென்று சாவுதி ராயின், யாம் மேலே விளக்கிப் போந்த பகுதிகளால் அது விளங்குமாயினும் இன்னுஞ் சிறிதுகாட்டுதும். 'கையறுநிலை' என்பது பொது மொழித் தொகுதி; அத்தொகுதி 'செயலறுதல்’ என்னும் பொருள் தருவதாம். அதுதான் ஆண்பாலிறந்து பட்டவழியும், பெண்பாலிறந்து பட்டவழியும், அவ்விருபாலு மொருங்கு பட்ட வழியுந் தோன்றுதலாற் படும் பாகுபாடு நோக்கி மூன்றென்று கொள்ளப்படும். இம்மூன்றனுள் ஆண்பால் காரணமாக நிகழுங் ‘கையறுநிலை'யும் பிறவும் பன்னிருபடலம், வெண்பாமாலை கூறினவெனவும், பெண் பாலும் அவ்விருபாலுங் காரணமாகக் கொண்டு நிகழுங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/66&oldid=1587173" இலிருந்து மீள்விக்கப்பட்டது