உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

மறைமலையம் - 21

கையறுநிலை' யும் பிறவும் ஆசிரியர் தொல்காப்பியனார் கூறின ரெனவும் பகுத்துணர்ந்து கொள்க. அற்றேல், ஆசிரியர் தொல் காப்பியனார்' ‘ஆண்பாற் கையறுநிலை' கூறப் பெறாரோ வெனின்; - நன்று சொன்னாய், அது மன்னைக் காஞ்சி யுளடங்குதல் பற்றிச் சொன்மாத்தரையின் வேறு கொண்டு மிகை படப் பிரித்தோதா ராயினா ரென்க. இதனை ஆசிரியர் - நச்சினார்க்கினிய ருரைக்கு மாற்றானு முணர்ந்து கொள்க. அவ்வா றாயினுங் கழிவுப் பொருட்டாகிய ‘மன்’ அடுத்து நிற்பத் துஞ்சிய ஆண்மகன்செய்து போந்த அருஞ்செயல் பலவுந் தொகுத்துக் கூறும் மன்னைக்காஞ்சியும், அங்ஙனம் ‘மன்’ அடாது அவனருஞ் செயலும் பிறவுங் கையறவு பட வுரைக்கும் கையறுநிலையுந் தம்முள் வேறுபாடுடைய வாமாறு அவை தம்மைப் புடைபட வொற்றி யளந்தாராய வல்லார்க்கு விளங்கு மாதலின் இந் நுண்பொரு ளெல்லா மறிதற்கு நீர் யார்? என்றிப்ப குதியாற் ‘சோமசுந்தரக் காஞ்சி’ யிற்போந்த ‘கையறுநிலை' ஆண்பாற் கையறுநிலையா மென்பதூஉம், அதனை யறியாது நீர் கூறிய வெல்லாம் வெறுங் குழறலே யாமென்பதூஉம், நிறுத்தப்பட்டவாறு காண்க. யாமென்பதூஉம்,நிறுத்தப்பட்ட

தாபத நிலை

இனி, நீர் 'தாபதநிலை' மேற் சில குழறிக் கூறி வைத்த வாறுங் காட்டுதும். தாபதநிலை என்பது ‘கொழுநனை யிழந்த மனைவி நிலைமை' என்னும் பொருட்டாம். அந்நிலைமையை மனைவி தானே கூறவும் பெறும்; அந்நிலைமையை வாங்கிக் கொண்டு பிறர் கூறவும் பெறுப. தானே கூறியதற்கு மேற்கொள் 'அளிய தாமே சிறுவெள் ளாம்பல” என்னும் புறநானூற்றுச் செய்யுளும் (248) பிறரதனை வாங்கிக் கொண்டு கூறியதற்குக் “கலந்தவனைக் கூற்றங் கரப்பக் கழியா

66

தலந்தினையு மவ்வளைத் தோளி - யுலந்தவன் றாரொடு பொங்கி நிலனசைஇத் தான் மிசையுங் காரடகின் மேல்வைத்தாள் கை.

என்னும் வெண்பாமாலைச் செய்யுளும் கபிலர் பாடிய "மலைவான் கொள்கென வுயர்பலிதூஉய்" (புறம் 143) என்னுஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/67&oldid=1587174" இலிருந்து மீள்விக்கப்பட்டது