உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சோமசுந்தரக் காஞ்சியாக்கம்

35

செய்யுளும் பிறவுமா மென்க. இனிக் கணவனிறந்துபட்ட அப்பொழுதே மனைவி பிறிதெவ்வுணர்வு மின்றி யாற்றாமை தானேயாய் மொழிக்கருவி தன்வயமின்றிக் குழற மெய்விதிர் விதிர்ப்ப இருவிழியும் பெருநீ ருகுப்ப அறிவுமாழ்கிப் புலம்புறு நிலை மைக்கண் வருந் தாபதநிலையும், கணவ னிறந்துபட்ட சிலநாட் பின்னர்த் தவநிலைக்குவேண்டும் ‘ஊணசையின்மை' முதலிய எண்வகை யொழுக்கமொடு மரீஇத் தன்னுடற் குறு துயரும் உயிர்க்குறு துயரும் பொறுத்துத் தன்னறிவையொருக்கி யிறைவன் றிருவடிக் கண் உய்த்து நோற்கு நிலைமைக் கண் வருந் ‘தாபதநிலை' யுமென நிகழ்ச்சி வேறுபாடு பற்றித் 'தாபதநிலை’ யைப் பகுத்து மிக நுண்ணிதாக வளந்தறிய வல்லார்க்குச் சோமசுந்தரக்காஞ்சியிற் போந்த 'தாபத நிலை' கணவன் றுஞ்சியவழி மனைவி மாட்டுக்கது மென நிகழும் புலம்புறு நிலைமைக்கண் வருவதா மென்பதூஉம், அந்நுண் பொரு ளியல்பறியாது பருப் பொருளறிவே மிக்குடையி ரென்பதனை யினிது புலப் படுத்தற்கு எண்வகை யுறுப்பொடு கூடிய தவவியல் தழாது முழுவதூஉம் புலம்பற் பொருளே நுதலிவந்தமையி னிது 'தாபதநிலை' யாதல் யாங்ஙன மென்று நீவிர் வினாவிய வெளிற்றுரை அறிவொடு படாக் குறுமொழி மாக்கள் குழறலுரையா மென்பதூஉம், இனிது விளங்கும். தெய்வப் புலமைக் கபிலர் பாடிய “மலைவான் கொள்கென வுயர் பலி தூஉய்” என்னுந் தாபதநிலைச் செய்யுண் முழுவதூஉம் புலம்பற் பொருளே நுதலி வந்து

66

“இன்னா, திகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாண் முலையக நனைப்ப விம்மிக்

குழலினைவதுபோ லழுதனள் பெரிதே”

எனப் புலவர் கூற்றான் முடிந்ததூஉங் காண்க. இனி இங்ஙனங் காட்டிய நுண்பொருட் பரப்பெல்லாம் நுண்ணி தாக ஆழ்ந்தறிய வல்லார்க்கு இனிது விளங்காநிற்ப, அவற்று ளொன்றுதானு மறிந்தெடுத் தெழுதும் நுண்ணறி வாற்றல் நும்பா லொருசிறிது மின்றா யொழியவும், நீரதனையுமறி யாது உம்மை மருட்டிய அறியாமையினையே யறிவென மயங்கக் கொண்டிறுமாந்து களித்துத் 'தாபதநிலை' மனைவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/68&oldid=1587175" இலிருந்து மீள்விக்கப்பட்டது