உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

❖ - 21❖ மறைமலையம் – 21

தானே ன் கூறப்பெறுவதா மென்றும், அஃதெண்வகைத் தவவுறுப்புக்க ளொடுங்கூடி நிகழ்வதா மென்றும் நியதிகட்டி அந்நியதி காணாமையிற் ‘சோமசுந்தரக் காஞ்சி' யிற்போந்த ‘தாபதநிலை' அப்பெயர்க் குரியதாவான் செல்லாதென மறுத்தபோலியுரை தொல்லாசிரியர் இலக்கண நூற்கு மிலக்கிய நூற்கு மெல்லாந் தோஷாரோபணங் கற்பித்தலின் அம்மறுப்பி னிழுக்கமும் நுமது போலி யளவை வுணர்வின் பெற்றியும் இனி எல்லாரு முணர்ந்து நகைப்பரென விடுக்க.

இனி அகம் புறமென்னும் பொருட் கூறுபாடு மவற்றி னிலக்க ணங்களும் ஒருங்கு நன்றுணர்ந்தீர் போல வேறுசில எதேதோகுழறி வைத்தீராகலின், அவற்றையு மொருசிறிது ஆராய்வாம். 'சோமசுந்தரக் காஞ்சி' யிற்போந்த ‘தாபதநிலை’ செய்யுட்களை அந்நிலைக்குரிய வென்றே கோடுமாயிற் "சடையா யெனுமால்" என்றற் றொடக்கத்துத் தேவாரத் திருப்பதிகத் திருவாக்கு மங்ஙனங் கொள்ளப்படுமோ வெனவும், அஃது அகத்திணையின்பாற் படுவதன்றோ வெனவு மொருகடா வழுப்பினீர். அகம் புறமென்னும் பொருட் பாகுபாடும் அவற்றினிலக்கணமுஞ் செவ்வனே யாராய்ந்தறிந்தீராயி னிவ்வாறு குழறுவீரல்லீ ராகலா னவையொருசிறிது மறியீ ரென்பதிதனாலின்றறிந்தோம். இதுகிடக்க. இனி, அகத்திணை பற்றி நிகழும் இரங்கற் பொருட்கும் புறத்திணைபற்றி நிகழும் இரங்கற் பொருட்கும் வேறுபாடு அறியமாட்டாமையின் அத்திருவாக்கு அகத்திணை பற்றி வந்ததென் றுரைசெய்தீர்.. அகத்திணைக்கண் நிகழும் இரங்கற் பொருள் சாக்காடு காரணமாக வருவதன்று. அது தலைவன் றன்னோ டொருங் கிருந்து இன்ப நுகர்தற் பயத்ததாங்காலத்து அங்ஙன மிருந்தின்பநுகராது * கால் -வட்டை (சக்கரம், கலம் - கப்பல்; காலினுங் கலத்தினும் பிரிந்த வழியும், ஓதன் முதலாகிய வினைப் பொருட்டுப் பிரிந்து வழியும் அப்பிரிவாற்றாமையாற் றலைவிமாட்டு நிகழுமாலைத்தாம். அங்ஙனம் நிகழும் இரங்கற்பொருடான் நெய்தற்றிணை பற்றிவரும். தலைமகன் பிரிவின்கட்டலைவி மாட்டு நிகழும் இவ்வேறுபாடு புறத் தார்க்குப் புலனாகாமையானும் தலைவி தானே ஒருசிறை யிருந்து மனம்புழுங்கிக் கடற்கானுங் கானற்கானுங் கூறும் பொருண்மைத் தாகலானும் அஃது அகத்திணையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/69&oldid=1587176" இலிருந்து மீள்விக்கப்பட்டது