உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மல்லாம்

  • சோமசுந்தரக் காஞ்சியாக்கம்

-

37

யாமென்பது கடைப்பிடிக்க. தலைமகன் பிரிந்தவழித் தலைமகளிடத்துப் பிறக்கு மிவ்விரங்கற் பொருணுட்ப ஆசிரியர் நல்லந்துவனார் கோத்த கலித் தொகையில் நெய்தற்கலியைப் படித்தறிந்து கொள்ளுதிர். தெய்வப் புலமை நக்கிரனாரும் இறையனாரகப் பொருளுரையில் இவையெல்லாம் மிக நுண்ணதாக வெடுத்துக் காட்டினார். ஆண்டும் பிறாண்டுங் காண்க. இனி யிவ்வாற்றாற் கணவனிறந்து பட்டவழிப் புறத்தார்க்குப் புலனாமாறு தலைவியிடை நிகழ்ந்த செயலறு நிலைமை நோக்கிவரும் “சடையாயெனுமால்” என்னுந் தெய்வத்திரு வாக்கு அகத்திணை மேற்றெனல் பொருளிலக்கண மரபறியாதார் கூறும் போலியுரையாய் முடிந்தவாறு காண்க. அற்றேல் “சடையாயெனுமால்” என்னுந் தெய்வத்திருவாக்கு எத்திணைபற்றி வந்ததென் றுசாவுதிராயிற், கூறுதும். யாம் மேலே கிளந்து கூறிய வாற்றாற் கணவன் றுஞ்சியவழி மனைவி மாட்டுக் கதுமெனத் தோன்றும் தாபதநிலைப் பொருளே காண்டு வருதலின் அத்திருவாக்குப் புறப்பொருட் டாபத நிலையா மென்பதூஉம், அத்தாபதநிலைப் பொருணுதலலொடு சிவபெருமானைப் பாடுதலாகிய அப்பொருளு ருளு முடன் கொண்டுவருதலி னத்திருவாக்குத் தேவபாடாண்டிணைக்கண் வந்த காஞ்சித்திணைத் தாபதநிலையா மென்பதூஉம், இவ்வாறு பாடாண்டிணையி லேனைப் புறப் பொருட்டிணை யுந் துறையும் விராய்வந்து முடிதல்,

  • 66

'பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே

நாடுங் காலை நாலிரண் டுடைத்தே” என்னுஞ் சூத்திர

வுரையில் ஆசிரியர் - நச்சினார்க்கினியர் அப்பொருட் கூறுபா டெல்லாம் பரக்கக்காட்டி விளக்கும் விழுமிய நல்லுரையால் நன்று தெளிவுறுக்கப் படுமாமென்பதூஉங் கடைப்பிடித்துணர்க. இங்ஙனந் தலையாய வறிவினார்க்கே விளங்கற்பாலனவாய் ஏனைப் புல்லறி வினார்க்கு விளங்கா திருண்டு கிடப்பனவாகிய பொருட்பால் நுண்பொருளெல்லா மறிதற்கு நீர் யார்? இவ்வா றறிதற்கரிய நுண்பொருட் பகுதி யெல்லாம் உள்ளுறை கருவாய்க்கொண்டு விளங்குத லாலன்றே, இக்காலத்துச் சாமானிய அறிவினராகிய தமிழ்ப் புலவர் பலர் பொருளதிகாரப் பயிற்சி குன்றியறிவு மழுக்கமுறுவா ராயினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/70&oldid=1587177" இலிருந்து மீள்விக்கப்பட்டது