உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

ஆசிரியர்

மறைமலையம் – 21

தொல்காப்பியனா ரியற்றியருளிய விழுமிய முழுமுதனூலை ஏனை யிலக்கண நூற்பொருளோ டொத்து ஏ ன நோக்கிப் பலகாற் பயிறலானும், அப்பயிற்சி கைவந்த பின்னர்க் கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பத்துப்பாட்டு, திருக்குறள், திருக்கோவையார் முதலிய தெய்வத் தமிழ் நூல்களை ஒருங்காராய்தலானும் நுண்மாணுழை புல முடைய ராகிய நன்மக்கள் பொருளியலறிவு நிரப்பப் பெறுவரென்க. இங்ஙனஞ் செய்ய வறியாது அவ்வாறெல்லாம் பொருளிய லறிவு நிரப்பி விளங்கு வாரைக் கண்டு பொறாமையுற்றுப் புறம்பழித்துத் திரிவாருரைகள் இளிவந்தன வென்று ஆன்றோர் கொள்ளா ரென்றொழிக.

இனி எம்மாசிரியர் பிரிவுறுதலா லெம்மிடத்தே தோன்றிய கையறவு எமக்குப் பெரிதாய்த் தோன்றும் எமதுளநிகழ்ச்சி பற்றிக் கையறுநிலையை முன்வைத் ததன் பின்னர்த் தாபதநிலையை வைத்தாமென்பதூஉமறியமாட்டாது, மனைவி துயர் பெரி தாகலி னதனை முன்வைத்தல் வேண்டுமெனக் கூறும் நீர் அத்திறமறியீரென விடுக்க.

இனி 'அழியாப்புகழென் னனையின்றுயரம்' என்பதிற் குற்றங் காணப் போந்து சிவபெருமா னொருவரே அழியாப் புகழுடைய ராதலாற் கலன்கழி மகளிரை யவ்வாறு கூறுதல் பொருந்தா தென்றீர். புனைந்துரை வகைபற்றி யியற்றப்படும் புலனெறி வழக்கிய லுணர்ந் தீராயின் இவ்வாறு குழறுவீரல்லீர். அதுதானு முணர மாட்டாமல் அணியிலக்கணப் பயிற்சியின்றி யார்ப்பரவஞ் செய்யும் நும்முரை கோழை யுரையா மென்க. அல்லதூஉம், இச்செந்தமிழ்த்தென்னாடெங்கணுஞ் சென்றுலவிச் சித்தாந்த சைவ வமிழ்தமழை பொழிந்து மக்கட்பயிர் கலித் தெழுந்து சிவானந்தப் பயன் விளைப்ப வருளிய எம்மாசிரியர் ஸ்ரீலஸ்ரீ-சோமசுந்தரநாயக வள்ளலுக் குரிமை மனைவியாராம் பெரு வாழ்வு பெற்ற எம் அன்னையார் அழியாப் புகழுடைய ரென்றலாற் படுமிழுக் கின்மையானும், அங்ஙனங் கூறுதலே சைவசித்தாந்த மரபாதலானும் அம்மரபறியாது புறங்கூறிய அப்போலிப் புலவர் சித்தாந்த சைவத்திற்குப் புறம்பென விடுக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/71&oldid=1587178" இலிருந்து மீள்விக்கப்பட்டது