உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சோமசுந்தரக் காஞ்சியாக்கம்

ஆனந்தக்குற்றம்

39

இனி, முதலிற்போந்த “சைவ மெனப்படு சமயந லுண்மை தழைந்து செழிந்திடவோ" என்னும் பாவின் முதனின்ற சைவம் என்னுஞ் சொல்லிற் குற்றங் காணப் போந்து யாமளேந்திரர் முதலாயினர் பகுத்த மங்கலச் சொற்களி லஃதொன் றாகாமை யானும், அதனை யொழித்து வேறு பொருத்தங்களேனு முளவோ வென்றாராய்வுழி முதற்சீர் மூன்றெழுத்தானின் றமையின் எழுத்துப் பொருத்தமும் அம்முதன் மொழி முதலெழுத்துப் பாட்டுடைத் தலைவன் பெயர் முதலெழுத்தோ டிணங்காமையின் இட ப்பொருத்தமும் இல்லாமையானும், அச்சொற் பாடாணவாத சைவம், பரிணாமவாத சைவம், பேதவாத சைவம், சங்கிராந்தவாத சைவம் எனப் பல தொடர் மொழிகளி லியைக்கப்பட்டுப் பொதுவுற நிற்றலி னதனை ஒழித்துச் சித்தாந்த சைவமெனக் கூறாது சைவமென்று தொடங்கிக் கூறுதல் பொருந்தாமையானும் அச்சொல் ஆனந்த மென்னுங் குற்றமுடைத்தாயிற்றென்று தமக்குத் தோன்றியவாறே கூறினார். இவை யொவ்வொன்றனையும் நிரலே வகுத் தெடுத்துக் கொண்டு பரிகரித்திடுதன் முன்ன ரவ்வானந்தக் குற்றத்தை யாராய்ந்திடுவாம்.

66

இனி, 'ஆனந்தக்குற்றம்' என்பதில் ‘ஆனந்தம்’ என்னுஞ் சொல் ‘சாக்காடு' என்னும் பொருட்டாம். இவ்வாறாதல் ‘கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதானந்தமும்" என்புழி ஆசிரியர் - நச்சினார்க்கினியர் உரைக்கு முரையாற் கண்டுகொள்க. எனவே, ‘ஆனந்தக்குற்றம்’ என்பது இறந்து பாடுறுவித்தற் கேதுவாகிய குற்றம் என்பதாகும். ஒரு புலவன் தானியற்றுஞ் செய்யுளுள் ஒரு சொல் மங்கலப் பொருள் பயவாமல் அமங்கலப் பொருள் பயக்குமானா லச்சொற் பாட்டுடைத் தலை மகனுக்குத் தீதுசெய்யுமாகலின், அஃதானந்தக்குற்றமா மென்பது பிற்காலத்து மதிநுட்பம் வாய்ப்பப் பெறாதார் துணிவுரையாம். ஒரு புலவனுக்கு உலகியற் பொருள றிவு நிரம்ப, அவ்வறிவு முதிர்ச்சியான் இடர்ப்படாது செம்பொருள் வளந்துறும் அவனிடத்திருந்து ளிதிற்றிரண்டு போதருஞ் செய்யுட் டொகுதியின் விழுப்ப மும், அங்ஙன முலகியற் பொருளறிவு நிரம்பாது இடர்ப்படு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/72&oldid=1587179" இலிருந்து மீள்விக்கப்பட்டது