உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

❖ 21❖ மறைமலையம் – 21

மொருவன் அசை, சீர், தளை, அடி, தொடை, பா, மடக்கு, திரிபு முதலியவற்றை யுழன்றறிந்து வலிந்த மைத்துப் பத்துவகைப் பொருத்தங்களும் மிறைக்கவி நுட்பமும் கொளுத்தி மிகமுயன் றியற்றும் போலிச் செய்யுட்டொகுதியி னிழுக்கமு மணரவல்ல நுண்ணறி வாளர் இப்போலிப் புலவர் எமது காஞ்சியின்மே லேற்றிக் கூறிய குற்றத்தினியல் பறிந்து 'இதுவோ விவன் கண்டது' எனக்கூறி நகையாடுவர். அல்லதூஉம், இச்சொல் ரைப்பின் நன்மையாம், இச்சொல் உரைப்பிற் றீமையாமென் றாராயாது ஒரு புலவன் கூறினானாயின் அச்சொற்றானே தன்பயனை நுகர்விக்குமா றியாங்ஙனம்? இங்ஙனம் ஒரு சொற் பயனாராயா துரைப்பி னது தானே பயன்றருமா றில்லை யென்பது பற்றியே வீரசோழிய நூலாரு ம் அறியாது மாராயாதுங் கொள்ளிற் பயன்கொடாதென்பது” என்றுரைத்தது. அற்றேல் தொல்லாசிரியர் பிறரைச் சாவவும் பிழைக்கவும் பாடினா ரென்பது காண்டுமாகலின் நீவிர் கூறியது

66

பொருந்தாதாம் பிறவெனின்; அறியாது கடாயினாய், மலவிருடுமித்து விரிதரு தமது தூய பேரறிவின்கண் இறைவன் றிருவருட் பேரொளி நிரம்பித் துளும்பும் பெருமாட்சியுடைய வவர் உலக மெல்லாந் தம்மாணைவழி நிறுத்த வல்லராகலி னவரது முழுமுத லாற்றல்பற்றி யச்சொற் பிழையாமை யல்லது அச்சொற்றானே தன்பயனை யெய்துவிக்குமா றில்லை யென்றொழிக. அப்பெரியார் நினைதன் மாத்திரையானே உலகமெல்லா மந்நினைந்தாங்கு தொழிற்படுமாயின் அவர் பெருமை கூறவரைப்படுமோ வென்பது. இதுபற்றி யன்றே குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி, கணமேயுங் காத்த லரிது” என்று செந்தமிழ்ப் பெருநாவலரும் ஒதுவாராயின ரென்பது. இனி, இங்ஙனஞ் சொற்றன்மை யாராயாது இறைவன் றிருவருட் பேரொளி வழிநின்று எழுதினமையின் சைவமெனப்படு சமயநலுண்மை தழைந்து செழித்திடவோ' என்பதன் முதனின்ற முதன் மொழி மங்கலம் இலாதலும் அது தானே தன்பயனை நுகர்விக்கு மாறு மில்லை மென்ப தறிவுடையோ ருணர்வர். இது கிடக்க.

66

இனி, இவ்வானந்தக் குற்றந்தான் தொல்காப்பியனாரை யுள்ளிட்ட முதுதவத் தொல்லாசிரியராற் கொள்ளப்பட்டதோ வென்ப தொருசிறி தாராய்வாம். ஆசிரியர் - தொல்காப்பியனா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/73&oldid=1587180" இலிருந்து மீள்விக்கப்பட்டது