உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தரக் காஞ்சியாக்கம்

41

ராதல் அவர் வழிப்பட்டு நூல்செய்த ஏனை யாசிரியராதல் இங்ஙனமொரு குற்றமுண்டென் றாராய்ந்தா ரல்லர். ஆசிரியர் தொல்காப்பியனார் ஒரு விழுமிய நூலின்கண் விலக்கற் பாலனவாகிய குற்றங்க ளிவை யென்பது தோன்ற, (தொல் மரபியல்)

"சிதைவெனப் படுபவை வசையற நாடிற் கூறியது கூறன் மாறுகொளக் கூறல் குன்றக் கூறன் மிகைபடக் கூறல் பொருளில மொழிதன் மயங்கக் கூறல் கேட்போர்க் கின்னா யாப்பிற் றாதல் பழித்த மொழியா னிழுக்கங் கூற றன்னானொரு பொருள் கருதிக்கூற லென்ன வகையினு மனங்கோ ளின்மை யன்ன பிறவு மவற்றுவிரி யாகும்."

என்று வகுத்துச் சூத்திரஞ் செய்தருளினார். தெய்வத் தமிழாசிரியர் கூறாத குற்ற மொன்றனைப் பிற்காலத்துப் போலி நூல்களிலிருந் தெடுத்துவந்து காட்டத் துணிந்த இப்போலிப் புலவர் அறிவுடையோரா லெள்ளப் பட்டொழிந்தன ரென்க. இதுபோலவே ஆளவந்த பிள்ளையென்பா ரொரு போலிப் புலவர் பெருங்கௌசிகனா ரென்னு நல்லிசைப்புலவரியற்றிய

மலைபடுகடாத்திற் குற்றங் காணப்போந்து "தீயினன்ன வொண்செங்காந்தன்” என்பதற்கு ஆனந்தக் குற்றங் கூறினா ரெனவும், அப்பாட்டிற் குரையெழுதப் புகுந்த திருவருட்பெருஞ் செல்வராகிய ஆசிரியர் நச்சினார்க்கினியர் அவ்வாளவந்த பிள்ளையை ‘அறியார்' என மறுத்து “நூலிற் குற்றங் கூறுகின்ற பத்துவகைக் குற்றத்தே ‘தன்னா னொருபொருள் கருதிக்கூறல்’ என்னுங் குற்றத்தைப் பின்னுள்ளோர் ஆனந்தக்குற்ற மென்ப தோர் குற்ற மென்று நூல் செய்ததன்றி அகத்தியனாரும் தொல்காப்பியனாரும் இக்குற்றங் கூறாமையிற் சான்றோர் செய்யுட்கு இக்குற்ற முண்டாயினும் கொள்ளாரென மறுக்க என்று அதனை யொழித் துண்மைப் பொருள் வலியுறுத்தினா ரெனவுஞ் செந்தமி ழியலறிவு வாய்ப்பப் பெற்றா ரெல்லாரு முணர்ந் திருக்கின்றமையின், அவ்வியலறிவு வாய்ப்பப் பெறாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/74&oldid=1587181" இலிருந்து மீள்விக்கப்பட்டது