உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

❖ - 21❖ மறைமலையம் – 21

இப்போலிப் புலவர் தொல்காப்பிய நல்லிலக்கண நூலை யிகழ்ந்து பிற போலி நூன் மேற்கோள் கொண்டு ஆனந்தக் குற்றஞ் சொல்லப் புகுந்தது குழறுபடையாய் முடிந்தது காண்க. இங்ஙனம் ஆசிரியர் - தொல்காப்பியனாரினுந் தம்மை நுணுகிய அறிவின ரென்று அறிவிலார் மயங்கிக் கொள்ளுதலை விரும்பி அப்பெருந்தவத் தொல்லாசிரியரொடு முரணித் தமக்கு வேண்டியவா றெல்லா மிலக்கணங் கூறப் புகுந்த பிற்காலத்துப் போலிப்புலவர் நூல்களை யுள்ளவா ராறாய்துமாயின் அவையெல்லாம் அளவை நெறிக்கண் நில்லாவாய் வழுப்படுமா றெளிது விளங்கும். அங்ஙனம் அம்முதுதவத் தொல்லாசிரிய ரொடு முரணிய பல போலிப் புலவர் கோள்களை யெல்லாம் ஒருங்கே களைந்தெறிந்து, அவ்வாசிரியர் மாட்சி விரித்து வெளிப்படையானுங் குறிப் பானுந் தமது நூல்களி லாங்காங்கு மேற்கோள் காட்டி நிலையிட்டு ரைத்தார் ஆசிரியர் சிவஞானயோகிகளுமென்பது. ஆசிரியர் நச்சினார்க் கினியரும் இவ்வாறே யேனைப் போலியாசிரியர் மதங் களைந்து உரைவரம்பு நிறுத்திச் செல்லுமா றவருரை களிற் காண்க. இனி ஒருசாரார், ஆசிரியர் தொல்காப்பிய னாரினும் நுண் கருத்து விளங்க மற்றவரோடு இணங்காமல் வேறு தாங்கொண்டு நிறுவி யெழுதிய பிற்காலத்துப் புலவர் நூல்களை யங்ஙன மிகழ்ந்து கூறுத லமையாதா மன்று தமக்காசிரியத் தலைமை நிகழுமிடங்களிற் பிதற்றுரை கிளந்து திரிகின்றமையி னதன் புரை சிறிது வெளிப்படுப்பாம்.

-

-

அங்ஙன மாசிரியரொடு முரணுவா ராயினும் நுண்பொருள் காட்டி இந்நாட் கேற்பவைத்து அவர் நிறுவ வல்லராயி னது பொருந்தும். இந்நாணிலமைக்கும் பொருந்தாது புரைபடுதலி னந்நூற் பொருள் கொள்ளாம். ஒன்று காட்டுவாம். பிற்காலத்தி லிலக்கண நூலெழுதிய பவணந்தியார், ஆசிரியர் தொல்காப்பியனாரினும் அஃகி யறிவார்போன்று ‘மக்க டேவர் நாக ருயர் திணை' என்றுயர்திணைப் பொருள் காட்டினார். ஆசிரியர் - தொல்காப்பியனாரோ “உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே”என்றதனை யுணர்த்தி யருளினார். தம்முட் பஃறலைப் பட்டு முரணிய பல வேறு சமயிகளும் பொதுநூ லெனக் கொண்டு போற்றி யாராயும் பொதுமைத் தாகலின் ஆசிரியர் தொல்காப்பியனார் தமதிலக்கண நூலிற் காட்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/75&oldid=1587182" இலிருந்து மீள்விக்கப்பட்டது