உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ய

சோமசுந்தரக் காஞ்சியாக்கம்

43

யளவை பற்றி உயர்திணையாவது மக்கட் பொருளென்று வைத்து இலக்கணஞ் சொல்லி வரம்பறுத்துப் பின் “தெய்வஞ் சுட்டிய பெயர் நிலைக் கிளவியு, மிவ்வென வறியு மந்தந் தமக்கிலவே” என வேறு சூத்திரத்தா லேனைத் தேவர், நாகர், நரகர் முதலிய பொருளியல் புலப்படுத் தோதினார். இந்நுண்மை தேற மாட்டாதபவணந்தியார் அவரினுந் தம்மைப் பேரறி வினராக மதித்து உயர்திணையாவார் மக்களோடு, தேவரு, நரகருமாவரென மேலுமிரண்டு கூட்டி யுரைத்துத் தம் அறியாமை புலப்படுத்திட்டார். என்னை? உலகாயத வுணர்ச்சிகொண் டொழுகுவா னொருவன் உயர்திணையாவார் மக்களேயன்றி வேறில்லை யெனக்கொண் டுரைக்குந் தனது கொள்கைக் கிணங்கவே பொருளாராய்வ னன்றிப் பிறிதாராய ஒருப் படானாகலின், அவன் மதத்திற்கும் பிறமதங்கட்கு மேற்ப வெல்லா மிலக்கணஞ் சொல்லும் முழுமுத லாற்றலுடைய தொல் காப்பிய நூலொடு மலைந்து பவணந்தியார் தாமியற்றிய நூலங் ஙன மேற்ப இலக்கணஞ் சொல்லாது மற்றவரால் விலக்கப் படுத லானும், ஆங்கில மொழியில் வல்லராய்த் திகழும் நுட்ப வறிவு டைய இக்காலத்து நன்மக்களுந் தொல்காப்பிய நுட்பமறிந் தின்புறுத லானுமென்பது. L பவணந்தியார்

தால்காப்பிய முழுமுத னூலோ டிங்ஙன மாறுகொண் டுரைத்திட்ட விடங்க ளெல்லாம் புரைபட்டுப் பொய்யா யொழியுமாறு ஆசிரியர் -சிவஞானயோகிகள் புலமை மலிய வெழுதிய தொல்காப்பியச் சூத்திரவிருத்தி, இலக்கண விளக்கச் சூறாவளி முதலிய அரிய நூல்களி னெல்லா மினிது விளங்கும். பிறவுஞ் சமய நேர்ந்துழி யெல்லாம் விரிப்பாம். இது கிடக்க.

இனி இவ்வானந்தக்குற்ற மென்பதொன் றுண்டென்று கோடு மாயினும் பல்வேறு வகைப்பட்ட சமயிக ளெல்லாரும் பொது நோக்கத்தா னதனைத் தழுவிக் கொள்ள ஒருப் படாமையின் அக்குற்றம் இலக்கண நூலின்கண் ஆராயப்படும் தலைமையுடைத் தன்றெனவும், அக்குற்ற மாராயும் பிற்காலத்து நூல்கள் மேற்கோளாகக் கொள்ளப்படுதற்கு ஏலாவெனவும் உணர்ந்து கொள்க. இப்போலி நூன்மேற்கோள் கொள்ளாமையா னன்றே, ஆசிரியர் சிவஞான யோகிகள் தாமியற்றிய காஞ்சிப் புராணப் பெருங்நூலிலவர் கூறும் மங்கலமொழி முதனிலையிட் டுரையாது வாளா" இருகவுட் டுளைவாக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/76&oldid=1587183" இலிருந்து மீள்விக்கப்பட்டது