உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

  • மறைமலையம் - 21

கார்க்கடங்க ளிங்குலிகம்” என்று தொடங்கியதூஉம், அவர் முதன் மாணக்கராகிய கச்சிப்பமுனிவர் திருத்தணிகைப் புராணத்தினு மவ்வாறே “மும்மதத்தனென் றொருபெயர் தனக்கு மொய் கூந்தல்" என்று தொடங்கிய தூஉ மென்க. இவ்வாசிரியர் மங்கல மொழி முதனிலையிட் டுரையாமையி னிவர்க்கெல்லாங் குற்றஞ் சொல்லத் துணிவிரோ? புறநானூற்றில் “கண்ணிகார் நறுங்கொன்றை” என்று தொடங்கிய பெருந்தேவனார்க்குங் குற்றங்கூற ஒருப்படுவிரோ? ஆண்மையும் புலமையு முடை யிராயின் எதிர் வந்து நின்று சான்று கூறி நிறுவுமின். இவ்வாறன்றி நுமது போலிக் குழாத்தி னிடைனின்று மற்றவரை மயங்கப் படுத்து நுங் கைப்புரை கூறிப் புகழ்ந்து கொள்ளாதீர்.

அதர்வசிகோபநிடத மறை கேற்பச் சிவபெருமானை யன்றி ஏனைத் தேவரைக் கனவினும் பொருட் படுத்து நினையாது அவன் றிருவடி யிரண்டனையுமேயுளங் கொண்டு வழுத்துஞ் சித்தாந்த சைவ மரபுணர்ந்தீராயின் மங்கலங் கூறல் வேண்டு மென்று றுதி கட்டி யுரையீர். சித்தாந்த சைவர் திருவாய் மலர்ந்தன வெல்லாம் மங்கல மல்லவோ? இவற்றாற் பிற்காலத்தா ரியற்றிய போலி நூற் மேற்கோள் கொண்டு மங்கல மொழி முதனிறுத் துரைத்தல் வேண்டு மெனவும், அங்ஙன முரையாக்கா லஃதானந்த மென்னுங் குற்றமா மெனவுங் கூறும் நும்முரை ஆசிரியர் - தொல் காப்பிய னாரொடு மாறுபடுதலானும் சித்தாந்த சைவ மரபிற்கு ஏலாமை யானும் அது போலியா யொழியுமென்றுணர்க. அற்றேல், தெய்வப்புலமை நக்கீரனார் *"உலக முவப்ப” என்றும், இளங் கோவடிகள் திங்களைப் போற்றுதும்” என்றும், மாணிக்க வாசகப் பெருமாள் "திருவளர் தாமரை” என்றும் சேக்கிழார் பெருமான்* “உலகெலாம் என்றும் மங்கல மொழி முதனிறுத்துத் தொடங்குமா றென்னை யெனின், தொல்காப்பிய விலக்கணம் பற்றி நூல் செய்யப் புகுந்த வவரெல்லா மங்ஙனம் நியதி கொண் டுரைத்தாரென்று கோடுமாயின் அந்நியதி புலப்படக் கிளக்கும் விதி யந்நூலுள் யாண்டுங் காணப்படாமையானும், ஆசிரியர் நச்சினார்க் கினியர் மலைபடுகடாத் துரையி லதனை மறுத்துக் கூறினாரென்பது மேலே காட்டினா மாகலானும், இனி அவர் காலத்தில் இருந்த ஏனை நல்லிசைப் புலவர் தாமும் அறா ன அயாணர் “நனந்தலை யுலகம்” என்றற் றெடக்கத்து மொழி

66

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/77&oldid=1587184" இலிருந்து மீள்விக்கப்பட்டது