உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தரக் காஞ்சியாக்கம்

45

களான் முதலுதலானும், அங்ஙனந் தொடங்கி யுரைத்தல் வேண்டு மென்பதே யவர் கருத்தன்றென்பதூஉம், அத்தொல் லாசிரியர் கூறியவற்றுட் சில சொற்க டம்மையே பிற்காலத்தார் மங்கல மொழி யென வேண்டினா ரென்பதூஉம் பெறுது மாகலின் அது கடாவன் றென மறுக்க. இது கிடக்க.

66

66

டு

இனிச் சைவம்” என்னுஞ் என்னுஞ் சொல்லில் அவரேற்றிய அவ்வானந்தக் குற்றந்தானு முளதோவென் றராய்வுழி யதுவு மில்லாது மங்கல நிறைந்து பொருத்த முறுகின் றமையின் அவர் கூறிய குற்றங்களை நிரலே யாராய்ந்து பரிகரித்திடுவாம். சைவம்” என்னுஞ் சொல்யாமளேந்திரர் முதலாயினார் பகுத்த மங்கலச் சொற்களுளொன்றா காமையான், அதுமங்கல மில்லாச் சொல்லாமென்றீர். “சைவஞ் சிவத்தொடு சம்பந்தம்” என்னுந் திருவாக்கானே மங்கலப் பொருளாகிய சிவபெருமானொடு இயைபுடையது சைவ மென்பதாம். மங்கலப் பொருட் கெல்லாம் முதன் மங்களமாய், ஏனை மங்கலப் பொருளெல்லாம் பிறந் திறந் துழன்று மாறுதலாகிய மங்கலக்குவைளு யெய்தி யிழிக்கப் படுவவாக, அவற்றொடு படாது காலமுங் கற்பனையும் முதலு மீறுங் கடந்து ஒரு பெற்றியதாய் அறிவருளின்பவு வினதாய் யாண்டும் நிறைந்து எல்லா மறிந்து எல்லாம் வல்ல தாய் மனமொழி யிறந்த எட்டாப் பொருளாய் அருட் பெருங் கடலாய் இன்பநிறைந்து ததும்பு புனித நீர்ப்பாய் முழுமுதற் கடவுளாய் விளங்கும் சிவவருட் பொருட் டொடர்புற்று எல்லாச் சமயங்கட்கு மேலாய் நிலைபெற்ற சைவ மங்களச் சொல்லை மங்கலமில்லாச் சொல்லென்று கூறுதற் கமர்ந் திசைந்த பொய்படு புரை நாவுடைய நீவிர் தாமோ சித்தாந்த சைவர்! நீவிர் தாமோ சித்தாந்த மரபுணர்ந்தீர்! நீவிர் தாமோ சித்தாந்த நூல் வல்லீர்! இதனாற் சைவ கோலம் புனைந்து திரிதருங் கரவுடைப் புறச்சமயப் புன்மை யுடையீ ரென்பதின் றறிந்தாம். யாமளேந்திரர் முதலிய சமணப் போலிப் புலவர் கூறாதுவிடின் அஃது மங்கலமில் சொல்லாய் விடுமோ? யாமளேந்திரர் செய்த இந்திரகாளி வழித்தாகிய வச்சணந்தி மாலை யுடையார் கூறிய,

66

“சீரெழுத்துப் பொன்பூ திருமணிநீர் திங்கள்சொற்

கார்பரிதி யானை கடலுலகந் - தேர்மலைமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/78&oldid=1587185" இலிருந்து மீள்விக்கப்பட்டது