உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

மறைமலையம் – 21

கங்கை நிலம் பிறவுங் காண்டகைய முன்மொழிக்கு மங்கலமாஞ் சொல்லின் வகை

وو

என்னுஞ் செய்யுளிற் 'பிறவும்' என்பதனா லின்னோ ரன்ன பிற மங்கலச் சொல் வரினும் அவையு மமைக்கப்படு மென்பது நன்று போதரவும் அதுதானு நீவிருணர மாட்டாது மங்கல மொழியி னிலக்கண மறிந்தீர் போன்று பெரியதோரார் ராரவாரஞ் செய்து 'சைவம்' என்னும் மங்கலச் சொல்லை அஃதில்லாச் சொல்லென இழித்துரைக்கப் புகுந்தது சிறுமகாரானு மெள்ளி நகையாடற் பாலதா மென விடுக்க.

இனிச் சைவ மெனப்படு' என்பதின் மங்கல மொழி முதற்சீர் மூன் றெழுத்தா னின் றமையின் எழுத்தானந்த மாயிற்றென் றுரை செய்தீர். இதுதானோ நீவி ரிலக்கண மறிந்தவாறு! மங்கல மொழி முதற்சீர் மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது எழுத்துக்களா னியைந்து நிற்றன் மங்கலமாகிய எழுத்துப் பொருத்தமா மென்பது,

“தப்பாத மூன்றைந்தே ழொன்பான் றவறிலவென் றொப்பா முதற்சீர்க் குரைசெய்வர் - செப்புங்கால் தண்டாத நான்காறெட் டாகா தவிர்கென்று கொண்டா ரெழுத்தின் குறி”

என்னும் வச்சணந்திமாலைச் செய்யுளா லினிதறி வுறுக்கப் படுவதாகவும், இவ்வெள்ளிடைப் இ வள்ளிடைப் பொருடானும் அறியு முணர்ச்சியின்றி முறை பிறழக்கொண்டு மங்கலமாக நின்ற அம்முதற் சீருக்கு எழுத்தானந்த மென்னுங் குற்ற முண்ட யிற்றென் றுரைத்த நும் ஏழை மதியை யெண்ணிப் பெரிதும் பரிவுறுகின்றாம். எமது நூற்குக் குற்றங் கூறியது பற்றி யாமொரு சிறிதும் வருந்துகின்றிலம், சாமானிய இலக்கணங்கடானும் முறைதரக் கல்லாது அவற்றின் பொருளைத் திரித்துணர்தலே யன்றி, அத்திரிபுணர்ச்சியின் வலிகொண்டு ஒரு நூற்குக் குற்றங் கூறப் புகுந்தது தான் தான் நுமக்குப் பெரிதும் ஏதமாயிற் றென்றுன்குகின்றோம். நும்போல இங்ஙனம் முறைபிறழக் கொண்டு புலம்பு வாரை வேறி யாண்டுங் கண்டிலம். இது நும் மூழ்வினைப் பயன் என் றெண்ணி யிரங்கி, இனியாயினு நுமக்கு இம்மயக்க வுணர்ச்சி நீங்கி நல்லறிவு விளங்குமாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/79&oldid=1587186" இலிருந்து மீள்விக்கப்பட்டது