உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சோமசுந்தரக் காஞ்சியாக்கம்

47

சிவபெருமான் றிருவருளை நினைந்து வழுத்துகின்றேம். இது

கிடக்க.

இனிச் 'சைவம்' என்னும் முதன்மொழி முதலெழுத்துப் பாட்டுடைத் தலைவனாகிய சோமசுந்தர குரவன் என்னுஞ் சொன்முதலெழுத்தோடொன்றி மங்கலத் தானத்தி னில்லாது மரணத் தானத்தி னின் றமையிற் குற்றமாயிற் றென்று அறியாமையாற் குழறிவைத்தீர். சாதாரண இலக்கண நூலறிவேனுஞ்சிறி துமக் கிருக்குமென்று நினைந்திருந்தேம். அதுதானு முமக் கின்றென்பது வெள்ளிடை மலைபோ லின்று ளங்கிற்று. இம் மறுப்பெழுதா திருந்தா லுமக்குச் சிறிது கௌரவ மிருந்திருக்கும்; தனை யெழுதி யக்கௌர வத்தினையு மொருங் கிழந்தீர். “கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற, வல்லதூஉமையந்தரும்" என்னுந் திருவாக்கின் உண்மைப் பொருளை நும்மளவிற் கண்டேம். இனிச் ‘சைவம்' என்னும் மங்கலமொழி முதலெழுத்தாகிய சை என்பதிலுள்ள ஐகார வுயிர் சோமசுந்தரகுரவ னென்னும் பாட்டுடைத் தலைவன் பெயர் முதெலழுத்தாகிய சோ என்பதிலுள்ள ஓகார உயிர்க்கு அரசு நிலையினின்ற தென்பதூ உம், அதனை யறியாது நீர் குழறியது வறிதா மென்பதூஉங் காட்டுவாம். ஒரு பாட்டுடைத்தலைவன் பெயர் முதலெழுத்தில் அகர வுயிராதல் ஆகார வுயிராத லிருந்ததென்று கோடுமாயின், அவ்வகர வுயிர் தாடங்கி ஒளகார வுயிரிறுதியாகக் கிடந்த பன்னிரண் டுயிரெழுத்தினையும் ஐந்து கூறாக்கி முதற் கூற்றைக் குழவிநிலை யென்றும், இரண்டாங் கூற்றை இளைஞன் நிலையென்றும், மூன்றாங் கூற்றை அரச நிலையென்றும், நான்காங் கூற்றை மூப்புநிலையென்றும், ஐந்தாம் கூற்றை இறப்பு நிலையை யென்றுங் கொண்டு முதன் மூன்று கூற்றுட்பட்ட எழுத்துக் களை முதலாகவுடைய மங்கலச் சொற்றொடங்கி யுரைப்பினது நிலைப் பொருத்தமாம்; மற்றிரண்டு நிலைகளிலுள்ள எழுத்துக் களாற்றொடங்கின் அது மங்கலமில்லதாமென்று வழங்கப்படும். அங்ஙனம் பன்னீ ருயிரெழுத்தினையும் ஐந்து கூறுபடப் பகுக்குங்காற் குற்றெழுத் தைந்துந் தமக்குரிய இனநெடிலோ டியைந்து நிற்ப ஐகாரவுயிர் இகரத்தினையும் ஔகாரவுயிர் உகரத்தினையுஞ் சேர்ந்து நிற்குமெனக் கூறுப. இதனை வச்சணந்தி நூலடையார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/80&oldid=1587187" இலிருந்து மீள்விக்கப்பட்டது