உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

1

67

பணிகொண்ட” வரலாறு கூறப்படுதலின் இஃது அதற்குப் பின் பாடப்பட்டதா மென்பதூஉம், அம்பலவனையே பெயர் கிளந்தோதிப்பாடுதலின் இதுவுந் தில்லைக் கண்ணேதான் அருளிச் செய்யப்பட்டதா மென்பதூஉம் பெறப்படும்.

இதற்கடுத்த திருவுந்தியாரின் இரண்டாஞ் செய்யுளில் ஏகம்பர் ஒருவருமே குறித்துச் சொல்லப்படுத லானும், இதன்கண் வேறெங்கும் வேறு திருக்கோயில் களிலுள்ள சிவபெருமான் சிறப்புப் பெயர்களுள் ஏதும் அங்ஙனங் குறித்துச் சொல்லப் படாமையானும் திருக்கச்சியேகம்பத்திற் செய்யப்பட்டதென்பது தும்; இது தில்லையிற் செய்ததென்பது பிசகு.

இது

பறு

என்பது

இதற்கடுத்த திருத்தோணோக்கம் தில்லையம் பலவன் மேற்றாய் வருதலின் இது தில்லைக் து கண் அருளிச்செய்ததாகு மென்க.

இதற்கடுத்த திருப்பொன்னூசலில் ஒவ்வொரு செய்யுட் கண்ணுந் திருவுத்தரகோச மங்கை கிளந்தெடுத்துப் பாடப் படுதலின், இஃதத் திருப்பதியின்கட் செய்யப்பட்டதாகுமன்றி, எவரோ தன் றலைப்பிற் குறித்து வைத்தவாறு இது தில்லைக் கண் அருளிச் செய்யப்பட்டதன்று. இதன்கண் எட்டாஞ் செய்யுளில் “ஞாலம் மிகப் பரிமேற்கொண்டு நமை யாண்டான்” என்று அடிகள் ஓதுதலின், இவர் தமது அமைச் சுரிமையை முற்றும் விட்டுத், திருவுத்தரகோசமங்கை

போந்தபின் இதனை அருளிச் செய்தாராகல் வேண்டு மென்பதூஉம் தானே பெறப்படும்.

இதற்கடுத்த அன்னைப்பத்து இளஞ்சிறுமகார் தாம் அன்னையோ டுரையாடும் பரிசாகவைத்து அடிகள் இதனையருளிச் செய்திருத்தலின், அடிகள் தம் அருமைச் சிறு புதல்வியின் பொருட்டு இதனைப் பாடினாரென்றல் இழுக்காது. இதன்கண் ஏழாஞ் செய்யுளிற் "பள்ளிக் “பள்ளிக் குப்பாயத்தர் பாய்பரிமேல் கொண்டென், உள்ளங்கவர் வரால் அன்னே யென்னும்” என்று தம்பொருட்டு மதுரையிற் குதிரைமேல் வந்த பெருமானைக் குறித்தலானும், ஆறாஞ் செய்யுளில் உத்தரகோச மங்கைப் பெருமானை எடுத்து மொழிதலானும் இதுவும் உத்தரகோச மங்கையில் அருளிச் செய்யப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/100&oldid=1587546" இலிருந்து மீள்விக்கப்பட்டது