உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

  • மறைமலையம் -22 ×

எனவும் நரியைப் பரியாக்கி அதன்மே லெழுந்

தருளிய இறைவன் றிறத்தையும், மதுரையிற் பிட்டுக்கு மண்சுமந்து பாண்டியனால் அடியுண்ட ஐயனருள் விளையாட்டையும் அடிகள் எடுத்தோதுதலின், அவர் அவை யிரண்டும் நிகழ்ந்தபின் மதுரையைவிட்டுப் புறம்போந்து திருவண்ணாமலையில் இறைவனைத் தொழுதிருந்தக்கால் ஃது அருளிச்செய்த தாகுமென்பது பெற்றாம்.

இஃது

இதற்கடுத்த திருப்பொற்சுண்ணம் என்பது, “அணிதில்லை வாணனுக்கே ஆடப் பொற்சுண்ணம் இடித்துநாமே,

“அம்பலத் தாடினானுக் காடப்பொற் சுண்ண மிடித்து நாமே,’

99

“சிட்டர்கள் வாழுந்தென் றில்லைபாடிச் சிற்றம் பலத்தெங்கள் செல்வம்பாடி

எனத் தில்லைவாணனைப் பலகாற் பாடுதலின், அது தில்லை யிலருளிச் செய்யப்பட்டதாதல் விளங்கா நிற்கும்.

இதற்கடுத்த திருக்கோத்தும்பி என்பதூஉந் தில்லையம் பலவனையே பலகாலுங் குழைந்துருகிப் பாடுதலின் அதுவுந் தில்லைக்கண் அருளிச் செய்யப்பட்டதெனவே கருதற்பாற்று.

இதற்கடுத்த திருத்தெள்ளேணம் ன்பதூஉம் தில்லை யம்பலவன் மேற்றாய் வருதலின் அதுவுந் தில்லைக்கட் பாடப்பட்டதெனவே கோடற்பாற்று.

இதற்கடுத்த திருச்சாழல் என்பது ஈழ மண்டலத் தினின்றும் போந்த புத்தரும் புத்த அரசனும் தில்லைக் கண் அடிகளோடு வழக்கிட்டுத் தோல்வியுற்றாராக, அப் புத்த மன்னன் வேண்டு கோட்கியைந்து ஊமையாயிருந்த அவன் புதல்வியை வாய்பேசச் செய்து, அவள் வாயிலாக விளங்கிய சவ வு ண்மைகளை அடிகள் அடிகள் வினாவும் விடையுமாக வைத்துப் பாடியருளினாராகலின் இதுவுந் தில்லைக்கண் அருளிச்செய்ததென்பது தானே போதரும்.

இதற்கடுத்த திருப்பூவல்லியில் “மண்பான் மதுரை யிற் பிட்டமுது செய்தருளித், தண்டாலே பாண்டியன் றன்னைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/99&oldid=1587545" இலிருந்து மீள்விக்கப்பட்டது