உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 1

65

டுத்தோதக் கேட்ட அவர்தம் மனைவியார் தாமும் அப் பெருமான்பாற் பேரன்பு மீதூரப் பெற்றாராதல்,

“ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாய்ஓவாள் சித்தங் களிகூர

நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்

பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள் பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறு

996

என்று அடிகளே ஓதுமாற்றல் நன்கு தெளியப்படும்.

னித், திருவெம்பாவையை அடிகள் அருளிச் செய் தது திருப்பெருந்துறையிலேயாம்; இதன் பதினோராஞ் செய்யுளில் “மொய்யார் தடம்பொய்கை புக்குமுகே ரென்னக், கையாற் குடைந்து குடைந்து குடைந்துன் கழல்பாடி எனத் திருப்பெருந்துறையிலுள்ள ‘மொய்யார் தடம் பொய்கை என்னுந் திருக்குளத்தில் நீராடுமாறு சொல்லப்பட்டிருத்தலின், இது திருப்பெருந்துறையிலன்றித், திருவண்ணாமலையில் அருளிச் செய்ததாக மாட்டாது; அதனால், அதன் றலைப்பின் கண் ‘திருவண்ணாமலையில் அருளிச் செய்யப்பட்டது' என எவரோ குறித்து வைத்தது தவறுடைத்தாமென்க.

இதற்கடுத்த திருவம்மானை திருவண்ணாமலையில் அருளிச் செய்ததாகல் வேண்டும்; என்னை? “பேணு பெருந் துறையிற், கண்ணார் கழல்காட்டி நாயேனை யாட்கொண்ட, அண்ணாமலையானைப் பாடுதுங்கா ணம்மானாய்” என்று தாம் பெருந்துறையில் ஆட்கொள்ளப்பட்டதனை இறந்த காலத்தும், அண்ணாமலையானைப் பாடுதலை காலத்தும் வைத்து அடிகள் ஓதுதலின் என்பது; மேலும்,

6

இதன் கட்,

“பந்தம் பரியப் பரிமேற் கொண்டான்'

எனவும்,

وو

“கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை

மண்சுமந்து கூலிகொண்டக் கோவான் மொத்துண்டு

புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்கா ணம்மானாய்'

எதிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/98&oldid=1587544" இலிருந்து மீள்விக்கப்பட்டது